பஞ்சாப் பொற்கோயிலுக்கு சென்ற ரம்யா பாண்டியன் | லியோ ‛படாஸ்' பாடலுக்கு வரவேற்பு எப்படி? | சந்திரமுகி 2 ரிலீஸ் : பழனி கோயிலில் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம் | டிசம்பர் 22ல் 'சலார்' ரிலீஸ்… - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காவிரி எங்களுடையதே... - பிரகாஷ்ராஜின் இரட்டை வேடம் அம்பலம் | பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு: பாதியில் வெளியேறினார் | ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு: நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு | ஹாரி பாட்டர் நடிகர் மைக்கேல் கேம்பன் காலமானார் | லியோ ஆடியோ விழா ரத்து- ஆதங்கத்தில் விஜய் ரசிகர்கள் வெளியிட்ட போஸ்டர்!! | சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்! |
படம் : மறுமலர்ச்சி
வெளியான ஆண்டு : 1998
நடிகர்கள் : மம்மூட்டி, தேவயானி, மனோரமா, ரஞ்சித், மன்சூர் அலிகான்
இயக்கம் : பாரதி
தயாரிப்பு : ஹென்றி
சந்தர்ப்ப சூழ்நிலை தான், ஒருவனை நல்லவனா, கெட்டவனா என தீர்மானிக்கிறது என்பதை உணர்த்திய படம், மறுமலர்ச்சி. தில்லானா மோகனாம்பாள் படத்துக்குப் பின், திரைப்படக் கல்லுாரி மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்ட படம், இது தான்.
காட்டுமன்னார்கோவிலில் வாழ்ந்த, வள்ளல் ராசு படையாச்சியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான, இப்படம் ஜாதி, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
ஊர் பெரியவரான மம்மூட்டி, வேறொரு ஊரில் உள்ள சந்தைக்கு செல்கையில், பாம்பு கடிக்கவிருக்கும் தேவயாணியை காப்பாற்றுகிறார். இதை தவறாக புரிந்துக் கொள்ளும், அவ்வூரின் தலைவரான ரஞ்சித், அவசரப்பட்டு மம்மூட்டியை கட்டி வைத்து அடிக்கிறார். இதனால், மம்மூட்டியின் ஊர் மக்கள், அவருக்கு தெரியாமல், ரஞ்சித் ஊருக்கு தீ வைக்கின்றனர். இதற்கு மம்மூட்டி தான் காரணம் என நினைத்து, அவரை பழிவாங்க துடிக்கிறார், ரஞ்சித். முடிவு என்ன என்பதை, டிவியிலோ, மொபைல்போனிலோ காண்க.
சமுதாய நல்லெண்ணத்தைப் பரப்பிய இப்படத்திற்கு, தமிழக அரசின் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது. மேலும், அந்த ஆண்டிற்கான சிறந்த வில்லன் விருது, ரஞ்சித்திற்கும்; சிறந்த வசனகர்த்தா விருது, இயக்குனர் பாரதிக்கும் கிடைத்தன. இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், நன்றி சொல்ல உனக்கு... பாடல், தேனாக இருந்தது. இத்திரைப்படம், மலையாளத்தில், பெல்லாரி ராஜா; தெலுங்கில் சூரியுடு; கன்னடத்தில் சூரப்பா; ஹிந்தியில், பிஹூல் ஆர் ஆக் என, ரீமேக் செய்யப்பட்டது.
தமிழ் சினிமாவிற்கு, மறுமலர்ச்சி அவசியமானது.