சோனு சூட்டின் ரொமான்ஸ் இசை ஆல்பம் வெளியானது | பிப்ரவரியில் அடுத்தடுத்து வெளியாகும் பார்வதியின் 2 படங்கள் | விஜய்சேதுபதியின் எழுத்தாளர் அவதாரம் | சொர்க்கத்தில் 1௦௦ நாட்கள் ; அமிதாப்பிற்கு புதிய பொறுப்பு | லூசிபர் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா | விஜய்-65வது படத்திலும் வில்லனாகும் பிரபல ஹீரோ | நயன்தாரா பாணியில் செயல்பட்ட வனிதா விஜயகுமார் | 'யாக்கை திரி'க்காக கொல்கத்தா வந்துசேர்ந்த பரத் | வாரணாசி ஸ்வீட் கடைக்காரருக்கு அஜீத் கொடுத்த இன்ப அதிர்ச்சி | எம்ஜிஆருக்கு சிறப்பு செய்த தலைவி படக்குழுவினர் |
படம் : மின்சார கனவு
வெளியான ஆண்டு : 1997
நடிகர்கள் : அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல், கிரிஷ் கர்னாட், எஸ்.பி.பாலசுப்ரமணியம், நாசர்
இயக்கம் : ராஜிவ் மேனன்
தயாரிப்பு : ஏ.வி.எம்.,
பாரம்பரியமிக்க, ஏ.வி.எம்., நிறுவனத்தின் பொன்விழா படம், மின்சார கனவு. காதலுக்கு துாது அனுப்புவதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதே, படம் சொல்லிய சேதி. படத்தின் நாயகன், ஏ.ஆர்.ரஹ்மான் எனக் கூறலாம். பாடல்களிலும், பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தினார். ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவில், அவ்வளவு புத்துணர்ச்சி தெரிந்தது.
படம் வெளியான பின், 'மின்சார கனவு சிறப்பு ரயிலில் இலவச பயணம்' என்ற, விளம்பர யுத்தி பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, படத்தின் வசூல் சூடுபிடித்தது. 200 நாட்களுக்கு மேல் படம் ஓடியது. 'தங்கத்தாமரை.... ' பாடலில் இடம்பெறும் அருவி, செயற்கையாக உருவாக்கப்பட்டது. கலை இயக்குனர், தோட்டா தரணி. அவருக்கு, தமிழக அரசின் விருது கிடைத்தது.
'வெண்ணிலவே...' என்ற பாடலில் இடம்பெற்ற நடனத்திற்கு, தேசிய விருது கிடைத்தது. 'தங்கத்தாமரை...' பாடலுக்காக, சிறந்த பாடகருக்கான தேசிய விருது, எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கிடைத்தது. 'மானாமதுரை...' பாடலுக்காக, சிறந்த பாடகிக்கான தேசிய விருது, சித்ராவிற்கு கிடைத்தது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்தது. மொத்தம், தேசிய விருதுகள், நான்கும், மாநில விருதுகள், மூன்றும் பெற்றது, இப்படம்.
மின்சார கனவு படத்தை, தமிழில் வெளியிட்ட அதே தினத்தில், மெருப்பு கலலு என, தெலுங்கிலும்; நான்கு மாதங்கள் கழித்து, சப்னே என்ற பெயரில், ஹிந்தியில், 'டப்பிங்' செய்து வெளியிடப்பட்டது.
ஏ.வி.எம்., பெயர் சொல்லும் படங்களில், மின்சார கனவும் ஒன்று!