சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
படம் : லவ் டுடே
வெளியான ஆண்டு : 1997-
நடிகர்கள் : விஜய், சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன், ராஜன் பி.தேவ்
இயக்கம் : பாலசேகரன்
தயாரிப்பு சூப்பர் குட் பிலிம்ஸ்
கிளைமேக்ஸ்க்காக வெற்றிப் பெற்ற படம், லவ் டுடே!
டாக்டர் ரகுவரனின், ஒரே மகனான விஜய், படித்து முடித்து, வேலைக்கு செல்லாமல், நண்பர்களோடு ஊர் சுற்றுகிறார். ரகுவரனும், விஜயும் நண்பர்கள் போல வாழ்கின்றனர். இந்நிலையில் விஜய், சுவலட்சுமியை காதலிக்கிறார். இவரின் தந்தை, ராஜன் பி தேவ் சந்தேகப் புத்தி அதிகமுடைய போலீஸ்காரர். இதனால் விஜயின் காதலை, சுவலட்சுமி ஏற்க மறுக்கிறார். காதலுக்காக எதையும் இழக்க தயாரான விஜய், ஒரு கட்டத்தில், தன் தந்தை ரகுவரனையே இழக்கிறார். இறுதியில் சுவலட்சுமிக்கு, விஜயின் மீது காதல் வருகிறது. ஆனால் விஜய், காதலால் நிறைய இழந்துவிட்டேன் எனக் கூறி, சுவலட்சுமியின் காதலை ஏற்க மறுக்கிறார். படத்தின் இறுதிக் காட்சி, அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதுவே, படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
படம் துவங்கிய சில நாட்களிலேயே, இயக்குனரின் திறமை குறித்து குறை கூறி, படத்தை நிறுத்த, சிலர் முயற்சித்தனர். ஆனால் பாலசேகரன் மீதும், கதையின் மீதும், விஜய் பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். படம் வெளியாகி, சூப்பர் ஹிட்டானது.
இப்படத்திற்கு, இசையமைத்தவர் ஷிவா. சலாமியா, ஏன் பெண்ணென்று, என்ன அழகு... போன்ற பாடல்கள், இளைஞர்களின் காதலுக்கு தேசியக் கீதமானது.இப்படம், சுஸ்வாகதம் என, தெலுங்கிலும்; மஞ்சு என, கன்னடத்திலும்; கய எஹி பார் ஹாய் என, ஹிந்தியிலும், ரீமேக் செய்யப்பட்டது.
லவ் டுடே பார்த்தால், இப்போதெல்லாம் அப்படி இல்லை என, நினைக்கத் தோன்றும்!