175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
படம் : பிஸ்தா
வெளியான ஆண்டு : 1997
நடிகர்கள் : கார்த்திக், நக்மா, மணிவண்ணன், மவுலி, மன்சூரலிகான்,
இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பு : பிரமிட் நடராஜன்
உள்ளத்தை அள்ளத்தா போன்று, காமெடி களைகட்டும் ரகளையான படம், பிஸ்தா.அப்பாவி மற்றும் அட பாவி என, இரு முகம் காட்டும் கதாபாத்திரத்தில், கார்த்திக் அசத்தியிருந்தார். மவுலி மற்றும் மணிவண்ணன், கார்த்திக் உடன் இணைந்து, படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றனர்.
சபரிமலைக்கு மாலை போட்டிருக்கும் கார்த்திக்கின் நல்ல குணத்தை அறிந்து, அவரை, ஊட்டியில் இருக்கும் தன் தொழிற்சாலைக்கு மேனேஜராக்குகிறார், மவுலி. மவுலியின் மகளான நக்மா, தொழிற்சாலையில் யாரும் வேலை செய்யக் கூடாது என, கட்டளையிட்டு இருக்கிறார். வீட்டில் இருக்கும் பொருட்களை உடைக்கிறார். நக்மாவுக்கும், கார்த்திக்குக்கும் அடிக்கடி சண்டை வருகிறது.
இந்நிலையில், நக்மா திருமணம் செய்து கொண்டால் தான், சொத்து அவருக்கு கிடைக்கும் என்ற உண்மை தெரிந்ததும், அப்பாவியாக இருக்கும் கார்த்திக்கை திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பின் தான், கார்த்திக் அப்பாவி அல்ல; அட பாவி என்பது தெரிய வருகிறது. கார்த்திக், சிறிது சிறிதாக நக்மாவின் அகங்காரத்தை அடக்கி, அவரது குணங்களை மாற்றுகிறார் என்பது தான், கதை.
வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் கதையில், முதல் பாதி, நக்மாவின் ஆட்டமும்; இரண்டாம் பாதியில் கார்த்திக்கின் ஆட்டமும் நடக்கும். இப்படத்திற்கு, கென்னடி கதை, வசனம் எழுதியிருந்தார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், கண்களிலே ஒரு காதல் நிலா, கோழிக்கறி கொண்டு வரட்டா, சரணம் அய்யப்பா... பாடல்கள், ரசிக்க செய்தன என்றால், பிஸ்தா, பிஸ்தா... என்ற பின்னணி இசை, பட்டையை கிளப்பியது.
நகைச்சுவை பாயாசத்தில், பிஸ்தா அருமையாக இருந்தது.