யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி | ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்! |
படம் : காதலுக்கு மரியாதை
வெளியான ஆண்டு : 1997
நடிகர்கள் : விஜய், ஷாலினி, ராதாரவி, ஸ்ரீவித்யா
இயக்கம் : பாசில்
தயாரிப்பு : சங்கிலி முருகன்
அனியத்திப் புறாவு என்ற மலையாள படத்திற்கு இசையமைத்தவர், அவ்ஸ்பச்சன். இப்படம், பல மொழிகளில், ரீமேக் செய்யப்பட்டது. தமிழில், இளையராஜா; தெலுங்கில், சிற்பி; ஹிந்தியில், ஏ.ஆர்.ரஹ்மான்; கன்னடத்தில், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் இசை அமைத்தனர். இதில் வெற்றி வாகை சூடியது, நம்ம இசைஞானி தான்!
பாசில் இயக்கத்தில், மலையாளத்தில் உருவானது, அனியத்திப் புறாவு. இப்படத்தை, காதலுக்கு மரியாதை என, தமிழிலும் அவரே இயக்கினார். இது, உண்மையாகவே காதலுக்கு மரியாதை தந்த படம். பெற்றோருக்காக காதலை தியாகம் செய்கிறது, இளம் ஜோடி. அவர்களின் தியாகத்தை ஏற்று, அவர்களை இணைத்து வைக்கின்றனர், பெற்றோர். இது தான், படத்தின் அடிநாதம்.
கவர்ச்சி, இரட்டை அர்த்த வசனம், பெண்ணை கேலி செய்யும் காட்சி என எதுவும், இப்படத்தில் துளியும் இல்லை. குடும்பத்துடன் மக்கள் திரண்டு வந்து படத்திற்கு, வெற்றி வாகை சூடி மகிழ்ந்தனர். இப்படத்தில், முதலில் நடிக்க வேண்டியது, அப்பாஸ் தானாம். அவரின் மேனஜரின் அலட்சியம், அந்த வாய்ப்பை பறிகொடுக்கச் செய்தது. அதன்பின் விஜய், இப்படத்தில் நடித்தார். இப்படத்திற்கு பின், அவரின், மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது.
இப்படத்தின் கதாநாயகியாக, புதுமுகம் இருக்க வேண்டும் என, பாசில் விரும்பினார். மலையாளத்தில் நடித்த ஷாலினியே, தமிழ் பதிப்பிலும் நடிக்க ஆர்வம் காட்டியதால், அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இளையராஜாவின் இசையில், பழனிபாரதியின் வரிகளில், என்னை தாலாட்ட, ஆனந்த குயிலின் பாட்டு, ஒரு பட்டாம்பூச்சி, இது சங்கீத திருநாளோ, ஓ பேபி, அய்யா வீடு திறந்து தான்... ஆகிய பாடல்கள், தமிழகம் எங்கும் ஒலித்தன.
கண்ணியமிக்கது, காதலுக்கு மரியாதை!