சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
படம் : பொற்காலம்
வெளியான ஆண்டு : 1997
நடிகர்கள் : முரளி, ராஜேஸ்வரி, மீனா, சங்கவி, வடிவேல்
இயக்கம் : சேரன்
தயாரிப்பு : ரோஜா கம்பைன்ஸ்
சமூக அக்கறை உடைய, இயக்குனர் சேரனிடம் இருந்து வெளியான தரமான படம், பொற்காலம். கிராமத்தில், மண் பானை செய்யும் குயவரான முரளி, பேச முடியாத தன் தங்கை, ராஜேஸ்வரியுடன் வாழ்ந்து வருகிறார். தன் தங்கையை திருமணம் செய்து வைக்க, போராடுகிறார். குடி தந்தையால், அந்த ஆசை நிறைவேறவில்லை. மீனா மற்றும் சங்கவி ஆகியோர், முரளியை விரும்புவர். திருமணத்திற்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுவதாலும், தன் அண்ணன் கஷ்டப்படுவதாலும், ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொள்வாள். இதனால் மன வேதனை அடைந்த மாணிக்கம், மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வார். மாற்றுத்திறனாளியின் வாழ்வை, அவர்கள் சந்திக்கும் பிரச்னையை, நெஞ்சை உருக வைக்கும் அளவிற்கு, நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டியிருந்தார், சேரன்.
தங்கைக்காக வாழும் மாணிக்கம் கதாபாத்திரமாகவே, முரளி வாழ்ந்திருப்பார். வடிவேலுவிற்கு, மிகச்சிறப்பான கதாபாத்திரம். குணச்சித்திர நடிப்பில், தங்கமாக ஜொலித்தார். மணிவண்ணன், இளவரசு, மீனா, சங்கவி என, அத்தனை பாத்திரப் படைப்புகளும் அருமையாக வார்க்கப்பட்டிருந்தன.
அருணாச்சலம் படத்தின் வெற்றி விழாவில், நடிகர் ரஜினி, பொற்காலம் தந்த சேரனுக்கு, தங்க செயின் அணிவித்து பாராட்டினார். தேவாவின் இசையில், தஞ்சாவூரு மண்ணு எடுத்து, ஊனம் ஊனம், சிங்குச்சா, கானங்குருவி ரெண்டு... பாடல்கள், ரசிக்க வைத்தன.
விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற இப்படம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில், ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் சினிமாவில், பொற்காலம் உருவாக்க, சேரன் போன்ற சில இயக்குனர்கள் மட்டுமே முயற்சிக்கின்றனர்!