Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - நேருக்கு நேர்

19 நவ, 2020 - 10:08 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Nerukku-Ner

படம் : நேருக்கு நேர்
வெளியான ஆண்டு : 1997
நடிகர்கள் : விஜய், சூர்யா, சிம்ரன், கவுசல்யா, ரகுவரன், கரண்
இயக்கம் : வஸந்த்
தயாரிப்பு : மெட்ராஸ் டாக்கீஸ்

வஸந்த் இயக்கிய, ஆசை படத்தின் தயாரிப்பாளர்களின் மணிரத்னமும் ஒருவர். இதையடுத்து மணிரத்னம் தயாரிக்க, வஸந்த் இயக்கிய படம், நேருக்கு நேர். இரட்டை நாயகர்கள் படமான இதில் விஜய், அஜித் ஆகியோர் நடித்தனர். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், சில பிரச்னைகளால், அஜித் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து, அந்த கதாபாத்திரத்தில், சூர்யா நடித்தார். சூர்யாவின் முதல் படம் இது தான். சினிமாவில் அறிமுகமான சூர்யாவிற்கு, அப்போது அஜித் வாழ்த்தும் கூறினார் என்பது, குறிப்பிடத்தக்கது.

பிரிந்துவாழும் தம்பதியான, ரகுவரன் - சாந்தி கிருஷ்ணாவின் தம்பிகளாக முறையே விஜய், சூர்யா இருவரும், பார்க்கும் இடங்களில் எல்லாம் முட்டிக் கொள்கின்றனர். ரகுவரனின் குழந்தைக்கு ஆபத்து வருகையில், விஜயும், சூர்யாவும் இணைந்து, காப்பாற்றுகின்றனர். மணிரத்னம் சுட்ட, அக்னி நட்சத்திரம் தோசையில் முட்டையை ஊற்றி, நேருக்கு நேர் எனக் கொடுத்தார், வஸந்த். அதே நேரம், காதல் காட்சிகளில், தன் முத்திரை பதித்தார் வஸந்த்.

அமைதியாக வில்லத்தனம் செய்யும் கரண் ரசிக்க வைத்தார். வழக்கம்போல ரகுவரன், தன் அனுபவ நடிப்பால், கைத்தட்டல் வாங்கினார். தேவாவின் இசையில், 'அவள் வருவாளா, மனம் விரும்புதே, எங்கெங்கே எங்கெங்கே, அகிலா அகிலா, துடிக்கின்ற காதல்...' என அனைத்துப் பாடல்களும், சூப்பர் ஹிட்டாக அமைந்தன. இப்போதும், இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர் கூட்டம் உண்டு.கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவும், லெனின் - வி.டி.விஜயனின் படத்தொகுப்பும் படத்தின் தரத்தை மெருகேற்றின.

நேருக்கு நேர் ரசிக்கலாம்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - சூர்ய வம்சம்மறக்க முடியுமா? - சூர்ய வம்சம் மறக்க முடியுமா? - பொற்காலம் மறக்க முடியுமா? - பொற்காலம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in