Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா ? - மோகமுள்

30 அக், 2020 - 09:13 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Mogamul

படம்: மோகமுள்
வெளியான ஆண்டு: 1995
நடிகர்கள்: அபிஷேக், அர்ச்சனா, நெடுமுடி வேணு, விவேக்
இயக்கம்: ஞான ராஜசேகரன்
தயாரிப்பு: ஜே.ஆர்.சர்க்யூட்

மறைந்த, எழுத்தாளர் தி.ஜானகிராமனால், 1956ல் எழுதப்பட்ட, மோகமுள் நாவல், பெரும் வரவேற்பை பெற்றது. அப்போதே, பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. அதை, 1995ல், ஞான ராஜசேகரன் திரைப்படமாக உருவாக்கினார். இது, அவரின் முதல் படம்.

கும்பகோணத்தில், பி.ஏ., படிக்கும் இளைஞன் பாபு, தன் தந்தையிடம் விருப்பப்படி, கர்நாடக இசையை கற்று வருகிறான். அவருக்கு, தன்னை விட, 10 வயது மூத்த பெண்ணான, யமுனா மீது, காதல் மலர்கிறது. அவன் காதலை, யமுனா மறுக்கிறாள். இச்சூழ்நிலையில், கல்லுாரி படிப்பு முடித்த பாபு, சென்னையில் வேலை பார்க்கிறான். இங்கு, யமுனாவின் குடும்பம், வறுமையில் வாடுகிறது. நிராதரவான யமுனா, பாபுவை நாடி, சென்னை வருகிறாள். அதன் விளைவு என்ன என்பது தான், கதை.

நாவலில் இடம்பெற்றிருக்கும் பல கதாபாத்திரங்களும், அவர்களின் பின்னணியும் கதையோட்டத்திற்கு உதவும். 600 பக்கங்களுக்கு மேல் உள்ள நாவலை, இரண்டரை மணி நேர சினிமாவாக பதிவு செய்வது, சாத்தியமில்லை என்பது தான், படத்தின் தோல்விக்கு காரணம்.

கர்நாடக இசைப் பின்னணி உள்ள கதை என்பதால், இளையராஜா, 'வாசஸ்பதி' ராகத்தில், 'கமலம் பாதக்கமலம்...' பாடலையும், சண்முகப்பிரியா ராகத்தில், 'சொல்லாயோ வாய் திறந்து...' மற்றும் 'சங்கீத ஞானமோ...' எனும் பாடலை, தன்யாசி ராகத்தில் அமைத்திருந்தார்.

வீடு, கோவில், குளம் என, கும்பகோணத்தின் தெருக்களில் எல்லாம், கேமரா புகுந்து, இயல்பான கதையை, ரசிகர்களுக்கு காட்டியது. இப்படத்திற்கு, தேசிய விருது கிடைத்தது என்றாலும், வசூலில் தோல்வியை சந்தித்தது. இது இலக்கிய வாசகர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்த்தியது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா?  சதிலீலாவதிமறக்க முடியுமா? சதிலீலாவதி மறக்க முடியுமா? - பம்பாய் மறக்க முடியுமா? - பம்பாய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in