Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? சதிலீலாவதி

29 அக், 2020 - 16:33 IST
எழுத்தின் அளவு:
Maraka-mudiyuma

வெளியான ஆண்டு : 1995


நடிகர்கள் : கமல், ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா, கோவை சரளா


இயக்கம் : பாலு மகேந்திரா


தயாரிப்பு : ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்


கடன் வாங்க சென்று, கேட்காமல் இருந்தார், இயக்குனர் பாலு மகேந்திரா. அவர், எதற்காக வந்தார் என, கேட்காமலேயே அறிந்து, பணம் கொடுத்து உதவினார், கமல். 'இது கடன் அல்ல; அடுத்த படத்திற்கான அட்வான்ஸ்' என, கமல் கூறியதால் உருவானது, சதிலீலாவதி.


இப்படத்திற்கு அனந்து, கதை எழுதினார். பாலு மகேந்திராவும், கமலும் இணைந்து, திரைக்கதை அமைத்தனர். கிரேஸி மோகன் வசனம் எழுதினார். எடிட்டிங், ஒளிப்பதிவு, இயக்கம் என, மூன்றையும் ஏற்றார், பாலு மகேந்திரா. நகைச்சுவை படம், வசூலில் பட்டையை கிளப்பியது.


அழகான, பிரபலமான கதாநாயகியருடன் நடித்து வந்த கமலுக்கு, இப்படத்தில் காமெடி நடிகை, கோவை சரளா தான் ஜோடி! இப்படத்தில், கோவை சரளாவிடமிருந்து தான், கமல், கொங்கு தமிழ் பேசக் கற்றுக் கொண்டாராம். இளையராஜா இசையில், வாலி பாடல்களை எழுதியிருந்தார்.


மனைவி கல்பனா குண்டாக இருப்பது, ரமேஷ் அரவிந்துக்குப் பிடிக்கவில்லை. இந்நிலையில், கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஹீராவிடம், தனக்கு திருமணமாகிவிட்ட செய்தியை சொல்லாமல், ரமேஷ் அரவிந்த் காதல் வளர்க்கிறார்.விடுமுறையை கழிக்க, இருவரும் பெங்களூரு செல்கின்றனர். அங்கு, தன் பால்யகால நண்பன் கமல்ஹாசன் மற்றும் அவரது மனைவி கோவை சரளாவை சந்திக்கிறார். ரமேஷ் அரவிந்தின் கள்ள ஆட்டம், கமல், ஹீரா மற்றும் கல்பனாவுக்கு தெரிகிறது. அதன் பின், தன் கணவரைத் திருத்துவதற்காக, கல்பனா சில நாடகங்களை அரங்கேற்றுகிறார். அதன் முடிவு என்ன என்பது, கிளைமேக்ஸ்!


இப்படம், பீவி நம்பர் 1 என்ற பெயரில், ஹிந்தியிலும், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், ராமா ஷாமா பாமா என, கன்னடத்திலும், 'ரீமேக்' செய்யப்பட்டது.நினைத்து சிரிக்க தேவை, சதிலீலாவத



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா ? - குருதிப்புனல்மறக்க முடியுமா ? - குருதிப்புனல் மறக்க முடியுமா ? - மோகமுள் மறக்க முடியுமா ? - மோகமுள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in