Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா ? - குருதிப்புனல்

28 அக், 2020 - 08:30 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Kuruthipunal

படம் : குருதிப்புனல்
வெளியான ஆண்டு : 1995
நடிகர்கள் : கமல்ஹாசன், அர்ஜுன், கவுதமி, நாசர்
இயக்கம் : பி.சி.ஸ்ரீராம்
தயாரிப்பு : ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம், இந்தியாவிலேயே, டால்பி ஒலி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளியான முதல் படம் போன்ற பெருமைகளை உடையது, குருதிப்புனல்!இப்படத்திற்காக, சென்னையில் உள்ள, தேவி தியேட்டரில், தன் சொந்த செலவில், டால்பி தொழில்நுட்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார், கமல்.

ஹிந்தியில் வெளியான, த்ரோஹ்கால் படத்தின், ரீமேக் தான், குருதிப்புனல். ஹிந்தியை விட, தமிழில் சிறந்த வெற்றியைப் பெற்றது. தமிழில், திரைக்கதை மற்றும் வசனத்தை, கமல்ஹாசன் எழுதினார். ஒளிப்பதிவாளர், பி.சி.ஸ்ரீராம், இப்படத்தை இயக்கினார். இப்படம், 30 நாட்களில் படமாக்கப்பட்டது. தணிக்கை குழு, இப்படத்திற்கு, ஏ சான்றிதழ் கொடுத்தது.

கமலும், அர்ஜுனும் காவல் துறை அதிகாரிகளாகவும்; பயங்கரவாத அமைப்பின் தலைவன் பத்ரியாக, நாசரும் நடித்திருந்தனர். பயங்கரவாத குழுவிற்குள் ஊடுருவும், காவல் துறையினர்; காவல் துறைக்குள் இருக்கும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்ற, இரட்டை சம்பவத்திற்குள் நடக்கும் ரணகளம் தான், குருதிப்புனல்.

இப்படம் தமிழ், தெலுங்கு என, இரண்டு மொழியிலும் உருவாக்கப்பட்டது. தெலுங்கில், துரோகி எனும் பெயரில், இப்படம் வெளியானது. இப்படத்தில், பாடல்கள் ஏதும் இல்லை. பின்னணி இசையை, மகேஷ் மகாதேவன் அமைத்திருந்தார்.

வீரம்னா என்னன்னு தெரியுமா... பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது போன்ற கூர்மையான வசனங்கள், படத்தின் பலமாக விளங்கின. தமிழர்களின் ரசிப்பு தன்மையை மேம்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டிருந்த கமல், உயர்ந்த கலைஞனாக ஜொலித்தார்.

குருதிப்புனல் என்ற ரத்த ஆறு!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா ? - அவதாரம்மறக்க முடியுமா ? - அவதாரம் மறக்க முடியுமா?  சதிலீலாவதி மறக்க முடியுமா? சதிலீலாவதி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in