Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா ? - அவதாரம்

28 அக், 2020 - 08:25 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---avatharam

படம் : அவதாரம்
வெளியான ஆண்டு : 1995
நடிகர்கள் : நாசர், ரேவதி
இயக்கம் : நாசர்
தயாரிப்பு : வைத்தியநாதன்

எந்தக் கலையாக இருந்தாலும், அதன் அழிவு காலம் மிக கொடூரமானது. திரைப்படத்தால், கூத்துக் கலை செல்வாக்கை இழந்து வந்த காலகட்டத்தை, அவதாரம் பதிவு செய்துள்ளது.

பாண்டி வாத்தியாரின் கூத்துக் குழுவில், இடம் பிடிக்க போராடும் குப்புசாமியாக நாசர். பாண்டி வாத்தியாரின் மகளாக, பார்வையற்ற பொன்னம்மாவாக ரேவதி. வில்லன் பாசியாக பாலா சிங் நடித்திருப்பர். கூத்தில் பிரதான வேடம் ஏற்கும் பாசியின் வில்லத்தனத்தால், கூத்துக் குழு அழிகிறது. சினிமாவில் நடிக்கும் ஆசையோடு, குப்புசாமி, பொன்னம்மாவை அழைத்துக் கொண்டு, சென்னைக்கு செல்கிறார். அந்த நகரம், இருவரையும் என்ன செய்கிறது என்பது தான், படத்தின் இரண்டாம் பகுதி.

இருளில் அமர்ந்து, தியேட்டரில் படம் பார்க்கிறோம் என்ற உணர்வை மறக்கச் செய்து, நிஜ வாழ்வியலை காட்டிய, நாசரின் இயக்கத்திற்கு, வாழ்த்துகள் சொல்லலாம். இதுவே, நாசர் இயக்கிய முதல் திரைப்படமாகும்.

பாலா சிங் என்ற உன்னத கலைஞனை, தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இப்படத்தில், அவரின் வில்லத்தனமே பிரதானம். கூத்தில் நடிக்க ஏங்கும் குப்புசாமியாக, நாசர் வாழ்ந்திருப்பார். ஆசை, விசுவாசம், காதல், அக்கறை, கோபம் என, அவரின் பாத்திரப்படைப்பு நகர்ந்து சென்றுகொண்டே இருக்கும்.

இளையராஜாவின் பின்னணி இசை, ரசிகர்களை உறையச் செய்தது. இசையமைக்க, மூன்று நாட்கள் மட்டுமே, அவர் எடுத்துக் கொண்டார். 'தென்றல் வந்து தீண்டும்போது, ஒரு குண்டுமணி குலுங்குதடி...' உள்ளிட்ட பாடல்கள், இன்றும் காற்றில் தவழ்ந்து கொண்டே இருக்கின்றன. இப்படம் வசூலில் வெற்றி பெறாவிட்டாலும், தரமான படம் என, விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.

இழப்பின் வலி, அவதாரம்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா ? - ஆசைமறக்க முடியுமா ? - ஆசை மறக்க முடியுமா ? - குருதிப்புனல் மறக்க முடியுமா ? - குருதிப்புனல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in