Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா ? - ஆசை

26 அக், 2020 - 09:25 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Aasai

படம் : ஆசை
வெளியான ஆண்டு : 1995
நடிகர்கள் : அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன்
இயக்கம் : வஸந்த்
தயாரிப்பு : ஆலயம்

கடந்த, 1956ல், ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான படம் ஆசை. ஆனால், இன்று மறக்க முடியுமாவில் இடம் பெறுவது, மணிரத்னம் தயாரிப்பில், வஸந்த் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளிவந்த ஆசை படம் பற்றிய நினைவுகள்.

இப்படத்தில் முதலில், சூர்யா நடிப்பதாக இருந்தது; அப்போது அவருக்கு நடிப்பதில் ஆர்வமில்லை. இதையடுத்து, அரவிந்த்சாமியை அணுகினர்; அவரிடம், அப்போது கால்ஷீட் கிடைக்கவில்லை. ஹீரோ தேடும் படலத்தில், வஸந்த் ஈடுபட்டார். டிவியில், வேட்டி விளம்பரத்தில் நடித்தவர், அந்த கதாபாத்திரத்திற்கு பொறுத்தமாக இருந்தார். அவர், ஹீரோவாக நடித்திருந்த நான்கு படங்களும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் அவரையே, ஆசைக்கு ஹீரோவாக்கினார், வஸந்த். அந்த ஹீரோ தான், அஜித்!

இப்படத்திற்கு முதலில், பூவெல்லாம் கேட்டுப்பார், கண்ணே போன்ற பெயர்கள் தேர்வு செய்யப்பட்டன; இறுதியில், ஆசை ஆனது! கொழுந்தியாள் சுவலட்சுமி மீது ஆசைப்படுவார், பிரகாஷ்ராஜ். அதற்காக, மனைவியையே கொலை செய்வார். சுவலட்சுமி விரும்பும் அஜித்தை, சதி திட்டம் தீட்டி பிரித்து விடுவார். இந்த உண்மை அனைத்தையும் உணரும் மாமனார், பூர்ணம் விஸ்வநாதன் என்ன முடிவு எடுத்தார் என்பது தான், படத்தின் கிளைமேக்ஸ்!

துறுதுறு இளைஞனான, ஜீவா கதாபாத்திரத்தில், அஜித் அனைவரையும் கவர்ந்தார். வெளியே, எம்.ஜி.ஆராகவும்; உள்ளே, நம்பியாராகவும் நடித்திருப்பார் பிரகாஷ்ராஜ்.

தேவா இசையமைத்த பாடல்களா இது? என, அனைவரையும் பிரமிக்க செய்தார். கொஞ்சநாள், மீனம்மா அதிகாலையிலும், புல்வெளி புல்வெளி, சாக்கடிக்குது சோனா... போன்ற பாடல்கள், பெரும் வெற்றி பெற்றன.

அலையடித்தது ஆசை!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - நாட்டாமைமறக்க முடியுமா? - நாட்டாமை மறக்க முடியுமா ? - அவதாரம் மறக்க முடியுமா ? - அவதாரம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in