Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - நாட்டாமை

25 அக், 2020 - 07:58 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Nattamai

படம் : நாட்டாமை
வெளியான ஆண்டு : 1994
நடிகர்கள் : சரத்குமார், விஜயகுமார், குஷ்பு, மீனா, கவுண்டமணி, பொன்னம்பலம்
இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்

ஏலே சம்முவம்... எட்றா வண்டிய... என்றபடியே, தமிழக குடும்பங்கள், தியேட்டருக்கு படையெடுத்தது, நாட்டாமை படத்திற்கு தான். 1994ல் வெளியான படங்களில், அதிரி புதிரியான ஹிட் அடித்த படம், நாட்டாமை தான்.

நீதி டா, நேர்மை டா என, பரம்பரையாக வாழ்ந்து வரும் குடும்பத்தின் கதை தான், நாட்டாமை. இதில் குடும்ப சென்டிமென்ட், சண்டை, காமெடி என, சரிவிகிதத்தில் மசாலா கலந்து உருவாக்கியிருந்தார், கே.எஸ்.ரவிக்குமார். சரத்குமார், இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். நாட்டாமையின் மூன்றாம் பங்காளியாக கவுண்டமணியும், செந்திலும் அடித்த கூத்துக்கள், தியேட்டரில் சிரிப்பு அலை எழ செய்தது. வில்லனாக பொன்னம்பலம், மிரட்டியிருந்தார்.

இப்படத்தில், முதலில் மம்முட்டி தான் நடிக்கவிருந்தார். அவர் ஏற்க மறுத்ததால், சரத்குமாருக்கு வாய்ப்பு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதும் கிடைத்தது. சிறந்த கதைக்கான விருது, ஈரோடு சவுந்தருக்கு கிடைத்தது. விஜயகுமார் கதாபாத்திரத்தில், பாரதிராஜாவை நடிக்க வைக்கலாம் என, படக்குழு நினைத்ததாம். அது, நிறைவேறவில்லை.

சிற்பி இசையில், நாட்டாமை பாதம் பட்டா, கம்பெடுத்து வந்த சிங்கம், கொட்ட பாக்கும், மீனா பொண்ணு, நான் உறவுக்காரன், கோழிகறி குழம்பு... பாடல்கள் வெற்றி பெற்றன. இப்படம், தெலுங்கில், பெத்தராயிடு என்ற பெயரில், ரீமேக் செய்யப்பட்டது. தமிழில், சரத்குமார் நடித்த வேடத்தில், மோகன்பாபுவும்; விஜயகுமார் நடித்த வேடத்தில், ரஜினியும் நடித்திருந்தனர். பாலிவுட்டில் அனில் கபூர் நடிப்பில் புலந்தியாகவும் ரீமேக் செய்யப்பட்டது.

நீதி சாகாது என்றார், நாட்டாமை!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - ஜெய்ஹிந்த்மறக்க முடியுமா? - ஜெய்ஹிந்த் மறக்க முடியுமா ? - ஆசை மறக்க முடியுமா ? - ஆசை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in