Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - ஜெய்ஹிந்த்

24 அக், 2020 - 15:05 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Jaihind

படம் : ஜெய்ஹிந்த்
வெளியான ஆண்டு : 1994
நடிகர்கள் : அர்ஜுன், ரஞ்சிதா, கவுண்டமணி, சந்திரசேகர், சாருஹாசன்
இயக்கம் : அர்ஜுன்
தயாரிப்பு : எஸ்.செயின் ராஜ் ஜெயின்

சினிமாவில், பயங்கரவாதிகளை அதிகம் கொன்றது, விஜயகாந்தும், அர்ஜுனும் தான். தேசத்தின் அமைதிக்கு ஊறு விளைவிக்க முயற்சிக்கும் பயங்கரவாதிகளை, அர்ஜுன் பந்தாடிய படம் தான், ஜெய்ஹிந்த். இப்படத்தை அவரே இயக்கினார் என்பது, கூடுதல் சிறப்பு.

இப்படத்தில் இடம் பெற்ற, 'தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்...' என்ற பாடல், சுதந்திர தினம், குடியரசு தினம், பள்ளி ஆண்டு விழா என, பல இடங்களில் முக்கிய இடம் பிடித்தது.

பயங்கரவாதிகளின் சதி செயலால், முதல்வர் மற்றும் அர்ஜுனின் அண்ணன் உயிரிழக்கின்றனர். இதையடுத்து, பயங்கரவாதிகளைத் தேடிச் சென்று அழிக்க, அர்ஜுன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இதில், காவலர்களான ரஞ்சிதா, கவுண்டமணி மற்றும் துாக்கு தண்டனை கைதிகளான நான்கு பேர் இடம் பெறுகின்றனர். இக்குழுவினர் காட்டிற்குள் சென்று, சாகசம் செய்து, பயங்கரவாதிகளை பிடிக்கின்றனர். பயங்கரவாதிகளின் பின்னணியில் இருப்பவர் யார், அவர்களின் சதி திட்டம் என்ன என்பது தான், பரபரப்பான கிளைமேக்ஸ்!

ஆக் ஷனில் பொறி பறந்தது என்றால், காமெடியிலும் பட்டையை கிளப்பியது, கவுண்டமணி - செந்தில் கூட்டணி. ஏட்டாக நடித்திருக்கும் கவுண்டமணியின் கனவில், அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கும் கதாபாத்திரத்தில், செந்தில் நடித்து இருப்பார்.

கடந்த, 1990ல் இருந்து, 1994 வரை, தெலுங்கு திரையுலகில் ஒதுங்கியிருந்த இசையமைப்பாளர், வித்யாசாகர், இப்படத்தின் மூலம், மீண்டும் தமிழுக்கு வந்தார். 'தாயின் மணிக்கொடி, கண்ணா என் சேலைக்குள்ள, முத்தம் தர ஏத்த இடம்..' போன்ற பாடல்களால், 'ஹிட்' அடித்தன.

தமிழகமே சொன்னது, ஜெய்ஹிந்த்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - நம்மவர்மறக்க முடியுமா? - நம்மவர் மறக்க முடியுமா? - நாட்டாமை மறக்க முடியுமா? - நாட்டாமை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in