மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
படம் : ஜெய்ஹிந்த்
வெளியான ஆண்டு : 1994
நடிகர்கள் : அர்ஜுன், ரஞ்சிதா, கவுண்டமணி, சந்திரசேகர், சாருஹாசன்
இயக்கம் : அர்ஜுன்
தயாரிப்பு : எஸ்.செயின் ராஜ் ஜெயின்
சினிமாவில், பயங்கரவாதிகளை அதிகம் கொன்றது, விஜயகாந்தும், அர்ஜுனும் தான். தேசத்தின் அமைதிக்கு ஊறு விளைவிக்க முயற்சிக்கும் பயங்கரவாதிகளை, அர்ஜுன் பந்தாடிய படம் தான், ஜெய்ஹிந்த். இப்படத்தை அவரே இயக்கினார் என்பது, கூடுதல் சிறப்பு.
இப்படத்தில் இடம் பெற்ற, 'தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுக ஜெய்ஹிந்த்...' என்ற பாடல், சுதந்திர தினம், குடியரசு தினம், பள்ளி ஆண்டு விழா என, பல இடங்களில் முக்கிய இடம் பிடித்தது.
பயங்கரவாதிகளின் சதி செயலால், முதல்வர் மற்றும் அர்ஜுனின் அண்ணன் உயிரிழக்கின்றனர். இதையடுத்து, பயங்கரவாதிகளைத் தேடிச் சென்று அழிக்க, அர்ஜுன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இதில், காவலர்களான ரஞ்சிதா, கவுண்டமணி மற்றும் துாக்கு தண்டனை கைதிகளான நான்கு பேர் இடம் பெறுகின்றனர். இக்குழுவினர் காட்டிற்குள் சென்று, சாகசம் செய்து, பயங்கரவாதிகளை பிடிக்கின்றனர். பயங்கரவாதிகளின் பின்னணியில் இருப்பவர் யார், அவர்களின் சதி திட்டம் என்ன என்பது தான், பரபரப்பான கிளைமேக்ஸ்!
ஆக் ஷனில் பொறி பறந்தது என்றால், காமெடியிலும் பட்டையை கிளப்பியது, கவுண்டமணி - செந்தில் கூட்டணி. ஏட்டாக நடித்திருக்கும் கவுண்டமணியின் கனவில், அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கும் கதாபாத்திரத்தில், செந்தில் நடித்து இருப்பார்.
கடந்த, 1990ல் இருந்து, 1994 வரை, தெலுங்கு திரையுலகில் ஒதுங்கியிருந்த இசையமைப்பாளர், வித்யாசாகர், இப்படத்தின் மூலம், மீண்டும் தமிழுக்கு வந்தார். 'தாயின் மணிக்கொடி, கண்ணா என் சேலைக்குள்ள, முத்தம் தர ஏத்த இடம்..' போன்ற பாடல்களால், 'ஹிட்' அடித்தன.
தமிழகமே சொன்னது, ஜெய்ஹிந்த்!