சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
படம் : நம்மவர்
வெளியான ஆண்டு : 1994
நடிகர்கள் : கமல், கவுதமி, நாகேஷ், கரண்
இயக்கம் : கே.எஸ்.சேதுமாதவன்
தயாரிப்பு : சந்தமாமா விஜயா கம்பைன்ஸ்
நம்மவர், வசூலில் வெற்றி பெறாவிட்டாலும், தரமான படம் என, விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. பணம் மற்றும் அதிகார செல்வாக்கு மிக்க நபரின் மகன், கரண். கல்லுாரி மாணவன் என்றாலும், அராஜகங்களில் ஈடுபடுகிறார். அக்கல்லுாரிக்கு புதிதாக வரும் வரலாற்று பேராசிரியரான கமல், அடாவடி மாணவனான கரணை எப்படி திருத்துகிறார் என்பது தான், கதைக்களம்.
கரண், இந்த படத்தில் கமலுக்கு இணையாக, ரவுடி மாணவன் பாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்து இருப்பார். நடன இயக்குனர், பிருந்தா, இப்படத்தில் நடித்திருந்தார். பேராசிரியராக நாகேஷ், கண்ணில் நீர் வழிய செய்திருப்பார். கவுதமி, கமலின் காதலியாக வாழ்ந்திருப்பார்.
இப்படத்தில், நீண்ட நேரம் இடம்பெறும் பல காட்சிகள், ஒரே ஷாட் என்ற முறையில் படம் பிடிக்கப்பட்டன. சிறந்த தமிழ் படம் மற்றும் நாகேஷுக்கு சிறந்த குணசித்திர நடிகர் என, இரண்டு தேசிய விருதுகளை, இப்படம் பெற்றது. தமிழக அரசின், சிறப்பு விருதும் கிடைத்தது.
இப்படத்தில், கமல், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவராக நடித்திருந்தார். இப்படத்திற்கு இசை அமைக்கும் போது தான், இசையமைப்பாளர், மகேஷ் மாதவனுக்கு, புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. மகேஷ் மாதவன், குருதிப்புனல், ஆளவந்தான் படங்களுக்கும் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்ற, 'பூங்குயில் பாடினால், சொர்க்கம் என்பது நமக்கு...' பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. மரணத்தை விளக்கும், 'முற்றுப் புள்ளியே இல்லாத வாக்கியம், போரடிச்சிடும் இல்லையா...' என்பது போன்ற, கண்மணி சுப்புவின் வசனங்கள், நறுக் தெறித்தது போல அமைந்திருந்தன.
நம்மவர் படத்தை, 'மாஸ்டர்' எனலாம்!