மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
படம் : வீரா
வெளியான ஆண்டு : 1994
நடிகர்கள் : ரஜினி, மீனா, ரோஜா
இயக்கம் : சுரேஷ் கிருஷ்ணா
தயாரிப்பு : பஞ்சு அருணாசலம்
அண்ணாமலை படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின், நடிகர் ரஜினி, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இணைந்த படம், வீரா. தெலுங்கில், ராகவேந்திர ராவ் இயக்கிய, அல்லரி முகுடு என்ற படத்தின், ரீமேக் என்றாலும், அதில் பல மாற்றங்களை செய்திருந்தார், சுரேஷ் கிருஷ்ணா. இப்படம் தெலுங்கில், வீரா என்ற பெயரிலேயே, டப்பிங் செய்யப்பட்டு வெளியானது!
ரஜினி, தன் காதலி மீனா இறந்ததாக நம்பப்படுவதால், முதலாளியின் மகளான ரோஜாவை மணக்கிறார். இந்நிலையில், மீனா, உயிருடன் இருப்பது தெரிந்து, அவரையும் திருமணம் செய்துக் கொள்கிறார். இரண்டு மனைவியரிடமும், ரஜினி படும் அவஸ்தையை, நகைச்சுவையாக கூறியது, வீரா.
முத்துவீரனாக ரஜினி நடித்திருப்பார். அதாவது, மீனாவிற்கு, முத்து; ரோஜாவிற்கு, வீரா. இப்படத்தில் இடம் பெற்ற, மாடத்திலே கன்னி... பாடல், ரஜினிக்கு சொந்தமான, சென்னையில் உள்ள ராகவேந்திர கல்யாண மண்டபத்தில் படமாக்கப்பட்டது. ரஜினி, செந்தில், ரோஜா, மீனா ஆகியோர் இடம் பெறும், கோவில் காட்சி, சென்னையில் உள்ள, பிர்லா மந்திர் என்ற இடத்தில் படமாக்கப்பட்டது. இங்கு, பொதுவாக படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இப்படம், 1994 தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது.
அண்ணாமலை உடனான ஒப்பீடுகளால், இப்படம், முதல் இரண்டு வாரங்களுக்கு, சுமாரான வசூலையே ஈட்டியது. அதன்பின், வெற்றி பெற்று, வசூலை குவித்தது.
இளையராஜாவின் இசையில், மாடத்திலே கன்னி, கொஞ்சி கொஞ்சி, ஆத்துல அன்னக்கிளி, வாடி வெத்தலை பாக்கு, மலை கோவில் வாசலில்... உட்பட, அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. படத்தின் வெற்றிக்கு ரஜினியும், இளையராஜாவும் தான் காரணம்.