Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - காதலன்

21 அக், 2020 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Kadhalan

படம் : காதலன்
வெளியான ஆண்டு : 1994
நடிகர்கள் : பிரபுதேவா, நக்மா, ரகுவரன், கிரீஷ் கர்னாட், வடிவேலு
இயக்கம் : ஷங்கர்
தயாரிப்பு : ஸ்ரீ சூர்யா மூவீஸ்

அதிரடியான, ஜென்டில்மேன் படத்தின் மெகா வெற்றிக்கு பின், காதலன் உடன் களமிறங்கினார், இயக்குனர் ஷங்கர்! காவலரான, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனான பிரபுதேவா, தமிழக கவர்னரான, கிரீஷ் கர்னாட்டின் மகள், நக்மாவை விரும்புகிறார். இதற்கிடையில், கிரீஷ் கர்னாட், சிதம்பரத்தில் வெடிகுண்டு வெடிக்க செய்யும் சதி வேலையை, ரகுவரனிடம் ஒப்படைக்கிறார். அங்கு நக்மாவும், பிரபுதேவாவும் செல்கின்றனர். முடிவு என்ன என்பது, பரபரப்பான க்ளைமேக்ஸ். மேலோட்டமாக பார்த்தால், ஏழை காதலன் - பணக்கார காதலி கதை தான். அதை படமாக்கிய விதத்தில் வெற்றி பெற்றார், ஷங்கர்.

காதலன் படத்தில், முதலில் நடிக்க இருந்தது பிரசாந்த் மற்றும் பாலிவுட் நடிகையான மாதுரி தீக் ஷித் தான். அதன்பின் தான், பிரபு தேவா, நக்மா இடம் பெற்றனர். இப்படத்தில், -பிரபுதேவாவிற்கு, விக்ரம்; நக்மாவிற்கு, சரிதா; கிரீஷ் கர்னாட்டிற்கு, கிட்டி ஆகியோர், குரல் கொடுத்தனர்.

இப்படம் வெளியாகி, முதல் ஒரு வாரம், தியேட்டரில் கூட்டமே இல்லையாம்; அதன் பின், இந்த படம் பாக்ஸ் ஆபீசில் வெளுத்து வாங்கியது!

கண்ணாடி பஸ், உருவம் தெரியாமல் உடை மட்டும் தெரிவது என, அனைத்துப் பாடல்களிலும் பிரமாண்டம் காட்டினார், ஷங்கர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், முக்காலா முக்காபுல்லா, என்னவளே அடி, எர்ரானி, ஊர்வசி உள்ளிட்ட பாடல்கள், பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

இத்திரைப்படம், பிரேமிக்குடு என்ற பெயரில் தெலுங்கிலும்; ஹம்சே ஹாய் முக்காபலா என்ற பெயரில், ஹிந்தியிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது. காதலுன்னு வந்துட்டா, கவர்னர் பொண்ணா இருந்தால் என்ன... என, பிரமாண்டமாக யோசித்தால், அது தான், காதலன்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - மகளிர் மட்டும்மறக்க முடியுமா? - மகளிர் மட்டும் மறக்க முடியுமா? - வீரா மறக்க முடியுமா? - வீரா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in