மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
படம் : காதலன்
வெளியான ஆண்டு : 1994
நடிகர்கள் : பிரபுதேவா, நக்மா, ரகுவரன், கிரீஷ் கர்னாட், வடிவேலு
இயக்கம் : ஷங்கர்
தயாரிப்பு : ஸ்ரீ சூர்யா மூவீஸ்
அதிரடியான, ஜென்டில்மேன் படத்தின் மெகா வெற்றிக்கு பின், காதலன் உடன் களமிறங்கினார், இயக்குனர் ஷங்கர்! காவலரான, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனான பிரபுதேவா, தமிழக கவர்னரான, கிரீஷ் கர்னாட்டின் மகள், நக்மாவை விரும்புகிறார். இதற்கிடையில், கிரீஷ் கர்னாட், சிதம்பரத்தில் வெடிகுண்டு வெடிக்க செய்யும் சதி வேலையை, ரகுவரனிடம் ஒப்படைக்கிறார். அங்கு நக்மாவும், பிரபுதேவாவும் செல்கின்றனர். முடிவு என்ன என்பது, பரபரப்பான க்ளைமேக்ஸ். மேலோட்டமாக பார்த்தால், ஏழை காதலன் - பணக்கார காதலி கதை தான். அதை படமாக்கிய விதத்தில் வெற்றி பெற்றார், ஷங்கர்.
காதலன் படத்தில், முதலில் நடிக்க இருந்தது பிரசாந்த் மற்றும் பாலிவுட் நடிகையான மாதுரி தீக் ஷித் தான். அதன்பின் தான், பிரபு தேவா, நக்மா இடம் பெற்றனர். இப்படத்தில், -பிரபுதேவாவிற்கு, விக்ரம்; நக்மாவிற்கு, சரிதா; கிரீஷ் கர்னாட்டிற்கு, கிட்டி ஆகியோர், குரல் கொடுத்தனர்.
இப்படம் வெளியாகி, முதல் ஒரு வாரம், தியேட்டரில் கூட்டமே இல்லையாம்; அதன் பின், இந்த படம் பாக்ஸ் ஆபீசில் வெளுத்து வாங்கியது!
கண்ணாடி பஸ், உருவம் தெரியாமல் உடை மட்டும் தெரிவது என, அனைத்துப் பாடல்களிலும் பிரமாண்டம் காட்டினார், ஷங்கர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், முக்காலா முக்காபுல்லா, என்னவளே அடி, எர்ரானி, ஊர்வசி உள்ளிட்ட பாடல்கள், பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.
இத்திரைப்படம், பிரேமிக்குடு என்ற பெயரில் தெலுங்கிலும்; ஹம்சே ஹாய் முக்காபலா என்ற பெயரில், ஹிந்தியிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டது. காதலுன்னு வந்துட்டா, கவர்னர் பொண்ணா இருந்தால் என்ன... என, பிரமாண்டமாக யோசித்தால், அது தான், காதலன்!