Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - அமைதிப்படை

17 அக், 2020 - 10:27 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Amaithipadai

படம் : அமைதிப்படை
வெளியான ஆண்டு : 1994
நடிகர்கள் : சத்யராஜ், ரஞ்சிதா, கஸ்துாரி, மணிவண்ணன்
இயக்கம் : மணிவண்ணன்
தயாரிப்பு : எம்.ஆர்.இன்டர்நேஷனல்

தமிழ் சினிமாவின், எவர் கிரீன் அரசியல் நையாண்டித் திரைப்படம், அமைதிப்படை. இப்படத்திற்கு நிகரான, அரசியல் நையாண்டிப் படம், இதுவரை உருவாகவில்லை என்பதில் இருந்தே, அமைதிப்படையின் தனித்துவத்தை புரிந்துக் கொள்ளலாம்.

தேங்காய் பொறுக்கும் அமாவாசை, எப்படி குறுக்கு வழிகளில் முன்னேறி, நாகராஜசோழன் எம்.எல்.ஏ.,வாக மாறுகிறான் என்பது தான், படத்தின் அடிநாதம். இதைச் சுற்றி எழுப்பப்பட்ட திரைக்கதையில், அரசியல் நிகழ்வை, படம் பிடித்துக் காட்டியிருப்பார் மணிவண்ணன். இன்று ஏமாற்றுபவரை கண்டு, என்ன அல்வா கொடுக்கறியா? எனக் கூறுகிறோமே, அதற்கு இப்படம் தான் காரணம்.

இப்படத்தில், தேர்தல் வெற்றி அறிவிக்கும் நேரம், சத்யராஜ் நாற்காலியில் அமரும் காட்சியை முன்னிறுத்தி, நடிகரின் உடல் மொழி எப்படி இருக்க வேண்டும் என, அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலையில் பாடம் எடுக்கப்படுகிறதாம்!

வால்டர் வெற்றிவேலுக்கு அடுத்து, சத்யராஜுக்கு கிடைத்த மறக்க முடியாத கதாபாத்திரம், அமாவாசை தான்! சத்யராஜ், இரட்டை கதாபாத்திரத்தில் அப்பாவாகவும், மகனாகவும் நடித்திருப்பார்.

இளையராஜாவின் இசையில், சொல்லிவிடு வெள்ளி நிலவே... உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக, 2013ல், நாகராஜசோழன் எம்.எல்.ஏ., என, எடுத்தனர். அதை பார்த்த ரசிகர்கள் கூறியது, ஏன் அமாவாசை... இதெல்லாம் உனக்கு தேவையா?

அமைதிப்படையின் பிளஸ், வசனங்கள் தான். கழற்றி போடும் கால்சட்டை முதல், ஜாதி கலவரத்தை துாண்டுவது வரை, அத்தனையிலும் அரசியலை சொன்ன மணிவண்ணனுக்கு நிகரான, இன்னொருவர் இதுவரை வரவில்லை.

அமைதிப்படை போல, இப்போதுள்ள அரசியலை பகடி செய்து, ரகளையான படத்தைத் தரலாம்; இயக்குனர் யாராவது தயாராக உள்ளனரா?

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - டூயட்மறக்க முடியுமா? - டூயட் மறக்க முடியுமா? - மகளிர் மட்டும் மறக்க முடியுமா? - மகளிர் மட்டும்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in