Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - டூயட்

16 அக், 2020 - 09:47 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---Duet

படம் : டூயட்
வெளியான ஆண்டு : 1994
நடிகர்கள் : பிரபு, ரமேஷ் அரவிந்த், பிரகாஷ் ராஜ், மீனாட்சி சேஷாத்ரி
இயக்கம் : கே.பாலசந்தர்
தயாரிப்பு : கவிதாலயா

எட்மண்ட் ரோஸ்டாண்டின், சைரானோ டி பெர்கெராக் என்ற பிரெஞ்சு நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்ட படம், டூயட். இசைக்குழு நடத்தி வரும், பிரபுவும், ரமேஷ் அரவிந்தும் சகோதரர்கள். இருவரும், மற்றவருக்கு தெரியாமல், திரைப்பட நடன இயக்குனரான, மீனாட்சி சேஷாத்ரியை காதலிக்கின்றனர். பிரபுவின் சாக்ஸபோன் இசையைக் கேட்டு மயங்கும் மீனாட்சி சேஷாத்ரி, அது ரமேஷ் அரவிந்த் என தவறாக நினைத்து, அவரை விரும்புகிறார். இந்த முக்கோண காதல் பிரச்னையின் தீர்வு என்ன என்பது தான், படத்தின் திரைக்கதை.

இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு, பெப்சி உமாவை அணுகினர்; அவர், மறுத்துவிட்டார். இதையடுத்து, சுகன்யா ஒப்பந்தமானார். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின், அவர் நீக்கப்பட்டார். இதையடுத்து, தமிழில் இருந்து ஹிந்தி பட உலகிற்கு சென்ற, மீனாட்சி சேஷாத்ரி நடித்தார்.

இப்படத்தில் கதாபாத்திரத்தின் தேவைக்காக, பிரபுவின் மூக்கு அளவு மாற்றப்பட்டது.இப்படத்தில் தான், பிரகாஷ் ராஜ், வில்லன் நடிகராக தமிழில் அறிமுகமானார். அதன் நினைவாக அவர், தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு, டூயட் மூவிஸ் என, பெயரிட்டார்.

படமே, கவிதையை அடிப்படையாக கொண்டது என்பதால், வைரமுத்து வைரமென ஜொலித்தார். சித்தத்தினால் உண்ட பித்தத்தினால் காதல் யுத்தத்தினால்... என்ற வசன கவிதையை, அப்போது உச்சரிக்காத இளைஞர்களே இல்லை எனலாம்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அஞ்சலி அஞ்சலி, காதலே என் காதலே, மெட்டுப்போடு, கத்திரிக்காய், குளிச்சா குத்தாலம்-... ஆகிய பாடல்கள் பெரும் ஹிட்! கடல் அலைகளுக்கு இடையே, டூயட் இசை கேட்டுக்கொண்டே இருக்கிறது!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? -  சீவலப்பேரி பாண்டிமறக்க முடியுமா? - சீவலப்பேரி பாண்டி மறக்க முடியுமா? - அமைதிப்படை மறக்க முடியுமா? - அமைதிப்படை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Jagan -  ( Posted via: Dinamalar Android App )
17 அக், 2020 - 11:04 Report Abuse
Jagan I heard Kushboo was the first choice and she acted in few scenes. After her fight with Prabhu, she walked out of the movie. is it true?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in