'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
படம் : மறுபடியும்
வெளியான ஆண்டு : 1993
நடிகர்கள் : ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த் சாமி, ரோகினி
இயக்கம் : பாலு மகேந்திரா
தயாரிப்பு : அஸ்வின் குமார்
கடந்த, 1982ம் ஆண்டு, மகேஷ் பட் இயக்கிய, அர்த் படம், 11 ஆண்டுகளுக்கு பின், மறுபடியும் என தமிழில், ரீமேக் ஆகியது. ரேவதி ஏற்று நடித்திருந்த, துளசி கதாபாத்திரத்தைச் சுற்றித் தான், இப்படம் உருவாக்கப்பட்டது. விருதுகள் எல்லாம், ரேவதிக்கு கிடைத்தன.
துளசியும், இயக்குனர் முரளிகிருஷ்ணாவும் தம்பதி. இந்நிலையில் முரளி கிருஷ்ணாவிற்கும், நடிகையான கவிதாவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது. முரளி கிருஷ்ணா, துளசியை விவாகரத்து செய்கிறார். துளசிக்கு, கவுரிசங்கரின் நட்பு கிடைக்கிறது. சில காலத்திற்கு பின், இன்னொருத்தியின் கணவரை திருமணம் செய்த குற்ற உணர்ச்சியில் கவிதாவிற்கு மனநலம் பாதிக்கப்படுகிறது. முரளிகிருஷ்ணாவை துாக்கி எறிகிறாள். முரளிகிருஷ்ணா, மீண்டும் துளசியிடம் வர, அவள் என்ன முடிவெடுத்தாள் என்பது தான், கிளைமேக்ஸ்!
இயக்குனர் முரளிகிருஷ்ணனாக, நிழல்கள் ரவியின் நடிப்பு அற்புதம். தடுமாற்றம், கோபம், குற்ற உணர்ச்சி என, அத்தனையையும், தன் முகபாவங்களால் சாதித்திருந்தார்.
துளசியின் மனப்போராட்டங்களை புரிந்து, சந்தர்ப்பத்தை உபயோகிக்காமல், அவள், தன் வாழ்க்கைக்கான புது அர்த்தத்தைத் தேட உறுதுணையாய் இருக்கும் கவுரிசங்கர் கதாபாத்திரம், அரவிந்த் சாமிக்கு. அமைதியாய், அற்புதமாய் செய்திருந்தார். குற்ற உணர்ச்சியால் தவிக்கும் கவிதாவாக, ரோகினி.
இப்படத்தில் இடம்பெற்ற வேலைக்காரப் பெண்ணின் வாழ்க்கை முதல், பாடல்கள் வரை அனைத்தும், நமக்கு பாடம் கற்றுக் கொடுக்கும். இளையராஜாவின் இசையில், ஆசை அதிகம், எல்லோருக்கும் நல்ல காலம், நலம் வாழ... பாடல்கள், தமிழர்களை தாலாட்டின. அனுபவமே திரைப்படமாகிறது!