ரஜினிக்கு பதிலாக சிம்பு | சாமி சாமி பாடலுக்கு இனி ஆடப்போவதில்லை ; ராஷ்மிகா | பவன் கல்யாண் படத்தில் நான் நடிக்கவில்லை ; மாளவிகா மோகனன் | தலைவி பட வெளியீட்டில் நஷ்டம் : நீதிமன்றத்தை நாட விநியோகஸ்தர் முடிவு | தனுஷூடன் கைகோர்க்கும் கட்டா குஸ்தி இயக்குனர் | மே-11ல் வெளியாகும் ஜோதிகாவின் மலையாள படம் | குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த ஆஸ்கர் விருது பட தம்பதி | நிழலும் நிஜமும் : சத்யப்ரியாவின் குடும்பத்தை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் | வளருங்கள் இது வெறும் ஷோ தான் : செந்தில் கவுண்டமணியை வைத்து ஹேட்டர்ஸை கலாய்த்த வெங்கடேஷ் பட்! | 44 வயதில் திருமணம்? - வைரலாகும் அருவி சீரியல் நடிகையின் புகைப்படங்கள் |
படம் : எஜமான்
வெளியான ஆண்டு : 1993
நடிகர்கள் : ரஜினி, மீனா, நம்பியார், மனோரமா, நெப்போலியன்
இயக்கம் : ஆர்.வி.உதயகுமார்
தயாரிப்பு : ஏ.வி.எம்.,
சின்ன கவுண்டர் கொடுத்த மாபெரும் வெற்றியை கொடுத்த உதயகுமாரின் இயக்கத்தில் ரஜினி நடிக்க விரும்பினார். ரஜினிக்கான மசாலாவுடன், ஜில்லா கலெக்டர் என்ற கதை தயாரானது. ஆனால், உதயகுமாரின் படம் போல இருக்க வேண்டும் என, ரஜினி விரும்பியதால், எஜமான் உருவானது.
ஊர் தலைவரான ரஜினி, மக்களின் அன்பை பெற்றவர். இவருக்கும், பங்காளியான நெப்போலியனுக்கும் பகை ஏற்படுகிறது. இருவருக்கும், முறைப்பெண்ணான மீனாவை திருமணம் செய்ய நினைக்கின்றனர். மீனாவும், ரஜினியும் காதலிக்கின்றனர். ரேக்ளா போட்டியில் வெற்றி பெற்று, மீனாவை, ரஜினி மணக்கிறார். நெப்போலியனின் சதியால், மீனாவின் கருப்பை பாதிப்புக்கு உள்ளாகுகிறது. இதனால், மீனா தற்கொலை செய்து கொள்கிறார். மனைவியின் மரணத்திற்கு பின், ரஜினி எடுக்கும் முடிவு என்ன என்பதே திரைக்கதை.
வானவராயன் கதாபாத்திரத்தில், வேட்டி - சட்டையில் கச்சிதமாக பொருந்தியிருந்தார், ரஜினி. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில், ரஜினி அங்கிள் என்று அழைத்த மீனா, இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தார். வைதீஸ்வரி கதாபாத்திரத்தில், ரசிகர்களின் மனதை அள்ளினார்.
கல்யாண வீடுன்னா, நான் தான் மாப்பிள்ளை; சாவு வீடுன்னா, நான் தான் பிணம் என்ற குணமுடைய வல்லவராயனாக, நெப்போலியன் அசத்தியிருப்பார்.
இளையராஜா இசையில், ஆலப்போல் வேலப்போல், அடி ராக்குமுத்து, எஜமான் காலடி, இடியே ஆனாலும், நிலவே முகம் காட்டு, ஒரு நாளும், துாக்குச்சட்டியே, உரக்க கத்துது கோழி... என, அனைத்து பாடல்களும், சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
படத்தின் மாபெரும் வெற்றிக்கு, ஏ.வி.எம்., நிறுவனம் செய்த, விளம்பரமும் முக்கிய காரணம். ஆளுயர ரோஜா மாலையுடன் வெற்றி நடை போட்டார், எஜமான்!