அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
படம் : திருடா திருடா
வெளியான ஆண்டு : 1993
நடிகர்கள் : பிரசாந்த், ஆனந்த், ஹீரா, அனு அகர்வால், சலிம் கோசி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இயக்கம் : மணிரத்னம்
தயாரிப்பு : ஆலயம்
அஞ்சலி, தளபதி, ரோஜா என, தொடர்ந்து மெகா வெற்றிப் படங்களை கொடுத்த, இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த படம் என்பதால், அதீத எதிர்பார்ப்புடன் வெளியானது, திருடா திருடா.
இப்படத்திற்கான கதையை, பிரபல இயக்குனர், ராம் கோபால் வர்மாவும், மணிரத்னமும் இணைந்து உருவாக்கியிருந்தனர். இது, ஹிந்தியானா ஜோன்ஸ் கதை தான். அதை, தமிழ் மண்ணுக்கேற்ப உருவாக்கியிருந்தார், மணிரத்னம். இந்திய படங்களில், அலேக்கா கிரேன் உபயோகிக்கப்பட்ட முதல் படம், இது தான்!
சின்ன திருட்டுகளில் ஈடுபடும் பிரசாந்த், ஆனந்த் ஆகியோருடன், எதிர்பாராத விதமாக, ஹீராவும் இணைந்து விடுகிறார். போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்லும் இவர்கள், அனு அகர்வாலை சந்திக்கின்றனர். அனு, சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவள். இவர்களிடம், 1,000 கோடி ரூபாய் பணம் உள்ள, கன்டெய்னர் கிடைக்கிறது. இவர்களை, ஒருபுறம் கடத்தல் கும்பல், மறுபுறம் போலீசார் துரத்துகின்றனர். முடிவு என்ன என்பது தான், சுவாரஸ்யமான துரத்தல் உடைய, திருடா திருடா!
மணிரத்னம், தன் வழக்கமான பாணியை கைவிட்டு, நகைச்சுவை துவலுடன் இப்படத்தை இயக்கியிருந்தார். பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவுக்கு, பூங்கொத்து கொடுக்கலாம். கொஞ்சம் நிலவு... பாடலில், எழும்பூர் பொருட்காட்சியகத்தின் முகப்பை காட்சிப்படுத்தியிருப்பார்; அதை நேரில் கூட, இவ்வளவு அழகாக காண முடியாது. இசை கருவிகள் இல்லையென்றால், ஏ.ஆர்.ரஹ்மான் இல்லை என்ற விமர்சனத்தை, ராசாத்தி... பாடல் மூலம் உடைத்தெறிந்தார். அந்த பாடலில், இசை கருவி ஏதும் பயன்படுத்தப்படவில்லை!
ரசனையால் கொள்ளையடித்தனர், திருடா திருடா!