பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் |
படம் : உழைப்பாளி
வெளியான ஆண்டு : 1993
நடிகர்கள் : ரஜினிகாந்த், ராதாரவி, ரோஜா, விசு, கவுண்டமணி
இயக்கம் : பி.வாசு
தயாரிப்பு : விஜயா புரொடக் ஷன்ஸ்
தொழிலில் இருந்து விலகி இருந்த, பாரம்பரியமிக்க, விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம், 20 ஆண்டுகளுக்கு பின், உழைப்பாளி படத்தை தயாரித்து, திரையுலகிற்கு மீண்டு வந்தது. இப்படம் உருவான நேரத்தில், நடிகர் சம்பளம் தொடர்பாக எழுந்த பிரச்னையால், வினியோகஸ்தர் சங்கம், ரஜினியின் திரைப்படங்களை வெளியிட தடை விதித்தது. இதனால், திரையரங்குகளில் நேரடியாக, உழைப்பாளி படத்தை வெளியிட்டார், ரஜினி.
படம், 100 நாட்களை கடந்து, பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, ரஜினி படத்திற்கான தடையை நீக்கி, மன்னிப்பு கோரியது வினியோகஸ்தர் சங்கம். பணக்காரன், மன்னன் படத்திற்கு பின், பி.வாசு, ரஜினிகாந்த்துடன் இணைந்த மூன்றாவது படம், உழைப்பாளி.
கூலி தொழிலாளியாக இருக்கும் ரஜினி, பெரும் செல்வந்தரின் வாரிசாக நடிக்க, அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கிருந்து தப்பிச் செல்லும் ரஜினிக்கு, அவர் தான் உண்மையான வாரிசு என்ற உண்மை தெரிய வருகிறது. அந்த சொத்து குறித்தும், தன் பெற்றோர் குறித்தும் அறிந்து கொள்ளும் ரஜினி, அதை தொடர்ந்து எடுக்கும் அதிரடி தான், படத்தின் கதை.
இப்படத்தில் இடம் பெற்ற, சிவனை கடத்தி செல்லும் ஐயர் காமெடி காட்சி, வெகு பிரபலம். ஐயர் கதாபாத்திரத்தில் நடித்த ராமகிருஷ்ணன், இப்படத்திற்கு பின், உழைப்பாளி ஐயர் என்றழைக்கப்பட்டார்.
தமிழ் திரையுலக வரலாற்றில், இரண்டாம் வெளியீட்டில், 80க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டு, உழைப்பாளி படம் சாதனை படைத்தது. இப்படத்தின் பாடல்களுக்கு, இளையராஜா இசையமைத்தார்; அவரது மகன், கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தார்.
தடைகளை உடைத்து நிமிர்ந்து நின்றான், உழைப்பாளி!