மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
படம் : அரண்மனை கிளி
வெளியான ஆண்டு : 1993
நடிகர்கள் : ராஜ்கிரண், அஹானா, வடிவேலு, காயத்ரி
இயக்கம் : ராஜ்கிரண்
தயாரிப்பு : ராஜ்கிரண்
சினிமா வினியோக நிறுவனம் ஒன்றில் தினக்கூலியாக பணியில் சேர்ந்து, பட வினியோகஸ்தராக உயர்ந்து, பின், சரிவை சந்தித்தார்; அதிலிருந்து மீண்டு, தயாரிப்பாளராக உயர்ந்தார்; இயக்குனர் அவதாரம் எடுத்தார்; கதாநாயகனாக வளர்ந்து, தமிழ் சினிமாவில், 1 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற, முதல் நடிகராக ஜொலித்தார்... அவர் தான், ராஜ்கிரண்!
அவர் தயாரித்து, நடித்த, என் ராசாவின் மனசிலே படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என களமிறங்கிய படம் தான், அரண்மனை கிளி. இளையராஜா கொடுத்த ஏழு பாடல்களுக்காக, கதை எழுதிய படம் இது என்ற சுவாரஸ்யமான செய்தி, அப்போது, பரபரப்பாக பேசப்பட்டது.
என்ன காரணத்தினாலோ, நடிகை குஷ்புவின் சாயல் உடைய அஹானாவை, கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார், ராஜ்கிரண். கூடவே, அன்றைய காலகட்டத்தில், குஷ்புவுக்கு குரல் கொடுத்த அனுராதா தான், அஹானாவுக்கும் பின்னணிக் குரல் கொடுத்தார். அன்றைய பத்திரிகைகள், 'சின்ன குஷ்பு' என்றே, இவரை கொண்டாடின.
இளையராஜாவின் இசையில், 'அடி பூங்குயிலே, அம்மன் கோவில், ராசாவே உன்னை விடமாட்டேன், ராத்திரியில் பாடும், வான்மதியே, என் தாயெனும் கோவிலை...' பாடல்கள், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. படத்தின் வெற்றிக்கு, இளையராஜா தான், முழு காரணம் என்றால், அது மிகையல்ல.
தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்படம் ரவிச்சந்திரன் நடிப்பில் நீலகண்டா எனும் பெயரில் கன்னடத்தில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில், தொடைத் தட்டி, ஹீரோவாக அமர்ந்தார், ராஜ்கிரண்.