Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - பொன்னுமணி

29 செப், 2020 - 09:23 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Ponnumani

படம் : பொன்னுமணி
வெளியான ஆண்டு : 1993
நடிகர்கள் : கார்த்திக், சவுந்தர்யா, சிவகுமார்
இயக்கம் : ஆர்.வி.உதயகுமார்
தயாரிப்பு : தாய்சக்தி புரொடக் ஷன்ஸ்

கிழக்கு வாசல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர், ஆர்.வி.உதயகுமாரும், நடிகர் கார்த்திக்கும் இணைந்த படம், பொன்னுமணி. இப்படத்தில் தான், நடிகை சவுந்தர்யா அறிமுகமானார். பெரும் வெற்றி பெற்ற இப்படம், 48 நாட்களில் உருவாக்கப்பட்டது.

கிராமத்தில் வசிக்கும் கார்த்திக், அவரது மாமா சிவகுமார் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்திருக்கிறார். சிறு வயதில் இருந்தே தன்னுடன் ஒன்றாக வளர்ந்த, மாமா மகள் சவுந்தர்யாவை உயிருக்குயிராகக் காதலிக்கிறார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க, சிவகுமார் நினைக்கிறார். இந்நிலையில், படிப்பை முடித்து, நகரத்திலிருந்து வரும் சவுந்தர்யா, மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கிறார். அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து, சம்பந்தப்பட்ட நபரை, கார்த்திக் கொலை செய்து விடுகிறார். ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து, விடுதலையாகும் கார்த்திக், சவுந்தர்யாவையும், அவரது குழந்தையையும் அரவணைத்து பாதுகாக்கிறார்.

இப்படத்தில், கார்த்திக்கின் முதிர்ச்சியான நடிப்பு, தமிழ் மக்களை கண்ணீரில் நனையச் செய்தது. இவருக்கு, சிறந்த நடிகருக்கான, பிலிம்பேர் விருது கிடைத்தது. காதல், குடும்ப சென்டிமென்ட் உடன், கவுண்டமணி - செந்தில் காமெடி கலந்து, சிறந்த படைப்பை கொடுத்திருந்தார் ஆர்.வி.உதயகுமார்.

இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும், இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரே எழுதியிருந்தார். இளையராஜாவின் இசையில், நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று, ஆத்து மேட்டுல, அடியே வஞ்சிக்கொடி, ஆடிப் பட்டம், அன்பை சுமந்து, சிந்து நதி செம்மீனே... என, அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.

அன்பை சுமந்து நின்றான், பொன்னுமணி!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - நான் பேச நினைப்பதெல்லாம்மறக்க முடியுமா? - நான் பேச ... மறக்க முடியுமா? - அரண்மனை கிளி மறக்க முடியுமா? - அரண்மனை கிளி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in