Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - நான் பேச நினைப்பதெல்லாம்

28 செப், 2020 - 09:56 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Naan-Pesa-Ninaipethellam

படம் : நான் பேச நினைப்பதெல்லாம்
வெளியான ஆண்டு : 1993
நடிகர்கள் : ஆனந்த் பாபு, மோகினி, விவேக், லதா, ஆனந்த்
இயக்கம் : விக்ரமன்
தயாரிப்பு : பொள்ளாச்சி அசோகன்

சினிமாவில், 'ஏ சென்டர்' எனும், பணக்கார ரசிகர்களை பெரிதாக கவராத படம், 'பி, சி சென்டர்' எனப்படும் நடுத்தர ஏழை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும். அப்படியான படங்களில் ஒன்று தான், நான் பேச நினைப்பதெல்லாம்.

புது வசந்தம் வழியாக, தமிழ் சினிமாவிற்கு புதிய பாதை காட்டிய, இயக்குனர் விக்ரமன், மூன்றாவதாக இயக்கிய படம், நான் பேச நினைப்பதெல்லாம். ஆபாசம், அடிதடி, இரட்டை அர்த்த வசனங்கள் ஏதும் இல்லாமல், தன்னம்பிக்கை ஊட்டும் படங்களை தந்து, தமிழ் சினிமாவை ஆரோக்கியமாக வைத்திருந்தவர், விக்ரமன். அவர் இயக்கிய, 13 படங்களையும் குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கலாம்.

வாழ்க்கையில் வெவ்வேறு காரணங்களால், தனித்தனியே காதல் தோல்வியை சந்தித்த ஆனந்த் பாபுவும், மோகினியும், சந்தர்ப்ப சூழலில் சந்திப்பர். அவர்களுக்கு துணையாக, விவேக் இருப்பார். ஆனந்த் பாபு, இசையமைப்பாளர் வாய்ப்பு தேடி அலைய, மோகினி, ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என, லட்சியம் கொண்டிருப்பார். ஆனந்த் பாபுவின் உதவியால், மோகினி, ஐ.ஏ.எஸ்., படித்து, கலெக்டராகி விடுவார். ஆனந்த் பாபு, இசையமைப்பாளராகி விடுவார். இது தான், படத்தின் கதைக்களம்.

காதலில் தோற்றால், வாழ்க்கையில் தோற்றதாக அர்த்தம் இல்லை என்பதை, அழுத்தமாக பதிவு செய்த படம். சிற்பி இசையில், 'ஏலேலங்கிளியே, ஏ பார் அம்பிகா, பூங்குயில் ராகமே, தேவன் கோவில், ஆகாய கங்கையே...' போன்ற அனைத்து பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.

எத்தனையோ படங்கள் இயக்கி இருந்தாலும், விக்ரமன், தன் சினிமா வாழ்க்கை குறித்து எழுதிய புத்தகத்திற்கு வைத்த பெயர், 'நான் பேச நினைப்பதெல்லாம்' என்பது தான்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - சின்னக் கவுண்டர்மறக்க முடியுமா? - சின்னக் கவுண்டர் மறக்க முடியுமா? - பொன்னுமணி மறக்க முடியுமா? - பொன்னுமணி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in