Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - சின்னக் கவுண்டர்

27 செப், 2020 - 11:56 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Chinna-Gounder

படம் : சின்னக் கவுண்டர்
வெளியான ஆண்டு : 1992
நடிகர்கள் : விஜயகாந்த், சுகன்யா, மனோரமா, கவுண்டமணி
இயக்கம் : ஆர்.வி.உதயகுமார்
தயாரிப்பு : வி.மோகன்

சின்னக் கவுண்டர் படம், 175 நாட்கள் ஓடி, தமிழ் சினிமாவில், கிராமத்து நாட்டாமை எனும், டிரண்ட் செட்டை உருவாக்கியது. கிராமத்து பஞ்சாயத்து தலைவருக்கு நேரும் அவப்பெயரை, எப்படி துடைக்கிறார் என்பது தான், படத்தின் திரைக்கதை. அதுவரையில், போலீஸ் கதாபாத்திரத்தில் ஜொலித்த விஜயகாந்தை, அப்படியே மாற்றி, கிராமத்து பெரிய மனிதராக மாற்றினார், ஆர்.வி.உதயகுமார்.

ஆக் ஷன் ஹீரோவாக இருந்தவருக்கு, இப்படத்தில் பெரிய அளவில் சண்டை காட்சிகள் ஏதுமில்லை. ஜாதியை முன்னிறுத்துகிறது; கதாநாயகியின் வயிற்றில் பம்பரம் விடும் அநாகரிக காட்சி இடம் பெற்றுள்ளது என, இப்படம் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. இப்படத்திற்கு பின், தொப்புளில், ஆம்லேட் போடுவது வரை, தமிழ் சினிமா, முன்னேறியது வேறு கதை. அந்த வகையான பம்பரம், சின்னக் கவுண்டர் பம்பரம் என, பிரபலமானது.

பொள்ளாச்சி அருகே உள்ள, சேத்துமடையில், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. கார்த்திக் ராஜாவின் ஒளிப்பதிவில், பசுமையான கிராமத்தின் குளிர்ச்சியை, ரசிகர்கள் அனுபவித்தனர். சிறந்த நடிகைக்கான, தமிழக அரசின் விருதை, சுகன்யா பெற்றார்.

இளையராஜா இசையில், முத்துமணி மாலை, அந்த வானத்தை போல, சின்ன கிளி, சுட்டி சுட்டி உன் வாலை, கண்ணுப்பட போகுதையா, சொல்லால் அடிச்ச... பாடல்கள், இன்றும் தேனாய், நம் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

விஜயகாந்திற்கு வெற்றி கொடுத்த பின், கமல், ரஜினி ஆகியோரின் படங்களை இயக்கினார், ஆர்.வி.உதயகுமார். இப்படம், தெலுங்கில், சின்னராயுடு என்றும்; கன்னடத்தில், சிக்கெசமான்ரு என்றும், ரீமேக் செய்யப்பட்டது.

பெரிய வெற்றியை பெற்றார், சின்னக் கவுண்டர்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா ? - மன்னன்மறக்க முடியுமா ? - மன்னன் மறக்க முடியுமா? - நான் பேச நினைப்பதெல்லாம் மறக்க முடியுமா? - நான் பேச ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in