Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா ? - மன்னன்

26 செப், 2020 - 09:53 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Mannan

படம் : மன்னன்
வெளியான ஆண்டு : 1992
நடிகர்கள் : ரஜினி, விஜயசாந்தி, குஷ்பு, விசு, கவுண்டமணி
இயக்கம் : பி.வாசு
தயாரிப்பு : சிவாஜி புரொடக் ஷன்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினியும், லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியும் இணைந்து நடித்த படம், மன்னன். என்றைக்கும் வசூல் மன்னன் ரஜினி தான் என்பதை, அடித்து சொல்லிய படம், இது!

கடந்த, 1986ல், ராஜ்குமாரின் நடிப்பில் வெளியான, அனுராகா அரலித்து என்ற கன்னட படத்தின், ரீமேக் என்றாலும், தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டன. பணக்கார, திமிர் பிடித்த பெண்ணான சாந்திதேவியின் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார், கிருஷ்ணன். இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில் சாந்திதேவி, கிருஷ்ணனை அடக்கி ஆள வேண்டும் என்பதற்காக, அவரை திருமணம் செய்து கொள்கிறாள். ஆனாலும் தொழிலாளியாக மீண்டும் வேலைக்கு செல்லும் கிருஷ்ணனால், சாந்திதேவி ஆத்திரம் அடைகிறாள். இந்நிலையில், சாந்திதேவியின் வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் போட்டியாளர் கும்பல், அவரைக் கடத்துகிறது. கிருஷ்ணன், அவரைக் காப்பாற்றுகிறார். இது தான், கதைக்களம்.

கிருஷ்ணனாக ரஜினியும், சாந்திதேவியாக விஜயசாந்தியும் போட்டி போட்டு நடித்திருந்தனர். இருவரும் முட்டிக்கொள்ளும் காட்சிகள், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினியின் சகத் தொழிலாளியாக இருக்கும் கவுண்டமணியின் நகைச்சுவை, படத்தை துாண் போல தாங்கி நின்றது. தியேட்டர், உண்ணாவிரதப் போராட்டம் போன்ற, சீன்கள் நினைத்தாலே சிரிப்பை வரவழைக்கும்.

படத்தின் சுவாரஸ்யத்திற்கு, விசுவின் வசனமும் பலம் சேர்த்தது. ரஜினியின் காதலியாக குஷ்பு, கண்ணியமான கதாபாத்திரத்தை ஏற்று இருந்தார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன. அடிக்குது குளிரு... பாடலை, ரஜினி பாடியிருந்தார்.

தமிழ் சினிமாவின் மன்னன் என்ற சிம்மாசனத்தில், கம்பீரமாக அமர்ந்தார், ரஜினி!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - உருவம்மறக்க முடியுமா? - உருவம் மறக்க முடியுமா? - சின்னக் கவுண்டர் மறக்க முடியுமா? - சின்னக் கவுண்டர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in