Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - உருவம்

25 செப், 2020 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Uruvam

படம் : உருவம்
வெளியான ஆண்டு : 1991
நடிகர்கள் : மோகன், பல்லவி, ஆர்.பி.விஸ்வம், வீர பாண்டியன், ஜெய்மாலா
இயக்கம் : ஜி.எம்.குமார்
தயாரிப்பு : டி.பி.சிங், தருண் ஜலான்யார்

13ம் நம்பர் வீடு போன்ற திகில் படங்கள் வரிசையில், மிரட்டிய படம், உருவம். மோகன், பில்லி சூன்யத்தில் சிக்கி, சைத்தானாக மாறி, குரூர தோற்றத்தில் நடித்தப் படம் இது. பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்த, ஜி.எம்.குமார் இயக்கிய, முதல் இரு படங்கள் வெற்றி பெறாத நிலையில், மூன்றாவதாக, உருவம் என்ற திகில் படத்தை உருவாக்கினார். படம், வெற்றி பெற்றது.

வழக்கில் வெற்றி பெற்று, பூர்வீக வீட்டில் மோகன், அவரின் மனைவி ஜெய்மாலா, தங்கை, மைத்துனர், குழந்தைகள் சகிதமாக குடியேறுகின்றனர்.பங்காரு முனி என்பவரால், நாத்திகராக இருக்கும் மோகனுக்குள் ஆவி புகுந்துவிடுகிறது. அது மோகனின் மனைவி, அவரது குழந்தைகள், மைத்துனர் என, அனைவரையும் அடுத்தடுத்து கொல்கிறது. ஜோல்னா சாமி என்பவர் போராடி, மோகனையும், குடும்பத்தில் எஞ்சி உள்ளோரையும் காப்பாற்றுகிறார். மோகன், மனநோயாளிகளுக்கான காப்பகத்திற்கு அனுப்பப்படுகிறார்.

இப்படம், மூன்று தனித்தனி குழுக்களால், படம் பிடிக்கப்பட்டது. படப்பிடிப்பை மூன்று பகுதியாக பிரித்து, மூன்று உதவி இயக்குனர்கள், மூன்று ஒளிப்பதிவாளர்கள் என, உருவாக்கப்பட்டது. கே.ராஜ்ப்ரீத், இளவரசன், தயாள் ஆகியோர், ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றனர். மிக குறைந்த செலவில், 12 நாட்களில், படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

இப்படத்தில், சண்டைக்காட்சிகள் இல்லை. இளையராஜா இசையில், பின்னணி இசை மிரட்டியது. படத்தில் ஆபாசமும், திகில் காட்சிகளும் அதிகமாக இருந்ததால், தணிக்கைக் குழுவால், நிறைய வெட்டுகளை பெற்றது. பின், 'ஏ' சான்றிதழுடன் படம் வெளிவந்தது.மிரட்டியது உருவம்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - ரோஜாமறக்க முடியுமா? - ரோஜா மறக்க முடியுமா ? - மன்னன் மறக்க முடியுமா ? - மன்னன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in