Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - வானமே எல்லை

15 செப், 2020 - 15:59 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Vaaname-ellai

படம் : வானமே எல்லை
வெளியான ஆண்டு : 1992
நடிகர்கள் : ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன், பானுபிரியா, மதுபாலா பப்லு, கவுதம், விசாலி கண்ணதாசன்
இயக்கம் : கே.பாலசந்தர்
தயாரிப்பு : கவிதாலயா புரொடக் ஷன்ஸ்

எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு அல்ல என்பதை அழுத்தமாக சொன்ன படம், வானமே எல்லை! ஊழல்வாதியின் மகனாக, ஆனந்த் பாபு; காதல் தோல்வியால் பப்லு; முதியோரை திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும் மதுபாலா; பல ஆண்களால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ரம்யா கிருஷ்ணன்; ஜாதியால், வேலை கிடைக்காத கவுதம் சுந்தரராஜன் ஆகியோர், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலையில், ஐந்து பேரும் ஒன்றாக இணைந்து, 100 நாட்கள், இந்த வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, தற்கொலை செய்து கொள்ள திட்டமிடுகின்றனர். கவுதம் சுந்தரராஜன், தற்கொலை முடிவில் இருந்து பின் வாங்கி, மனம் திருந்தி வாழுங்கள் என, தலைமறைவாகி விடுகிறார்.

இந்நிலையில், அவர்கள் வசிக்கும் வீட்டின் வாசலில் கிடக்கும் குழுந்தையை வளர்க்கின்றனர். அக்குழந்தையை, அனாதை விடுதியில் சேர்த்த பின், நால்வரும், தற்கொலை செய்து கொள்ள நினைக்கின்றனர். அனாதை இல்லத்தில் ஏராளமான மாற்றுத் திறனாளிகளைப் பார்த்ததும், உடலில் குறைபாடுகள் இருந்தாலும், அவர்கள் நம்பிக்கையுடன், வாழ்க்கையை எதிர்கொண்டு சந்தோஷமாக வாழ்வதைப் பார்த்த பின், தற்கொலை எண்ணத்தை விட்டொழித்து, மனம் மாறி, மகிழ்ச்சியுடன் வாழத் துவங்குகின்றனர்.

மரகதமணி இசையில், சோகம் இனி இல்லை, ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம், கம்மங்காடு... போன்ற பாடல்கள், பெரும் வெற்றி பெற்றன. தேர்வு அச்சத்தில், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் இன்றைய சூழலிலும், அவசியமான படம், வானமே எல்லை!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - என் ராசாவின் மனசிலேமறக்க முடியுமா? - என் ராசாவின் மனசிலே மறக்க முடியுமா? - அமரன் மறக்க முடியுமா? - அமரன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in