Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - என் ராசாவின் மனசிலே

15 செப், 2020 - 15:54 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---En-rasavin-manasile

படம் : என் ராசாவின் மனசிலே
இயக்கம் : கஸ்துாரி ராஜா
வெளியான ஆண்டு : 1991
நடிகர்கள் : ராஜ்கிரண், மீனா, வடிவேலு தயாரிப்பு : ராஜ்கிரண்

வினியோகஸ்தராக சினிமா வாழ்க்கையை துவங்கியவர், தயாரிப்பாளராக உயர்ந்து, கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்து, இயக்குனராகவும் ஜொலித்தவர் ராஜ்கிரண்.ராஜ்கிரண் நடிப்பில் வெளியான, என் ராசாவின் மனசிலே... தமிழகம் முழுதும் பட்டையை கிளப்பியது; வசூலை அள்ளிக் குவித்தது.

மீனா, வடிவேலு ஆகியோருக்கு, இப்படம் திரைத்துறையில் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு உதவியாக இருந்த கஸ்துாரிராஜா, இப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். கிராமத்தில் துணிச்சலாக செயல்படும் மாயாண்டி, தன் உறவினர் பெண்ணான, மென்மையான சுபாவம் உடைய சோலையம்மாவை விரும்புவார். இருவருக்கும் திருமணம் நடக்கும். மாயாண்டியின் முரட்டுத் தனத்தால், சோலையம்மா விலகியே இருப்பாள். இந்நிலையில், பிரசவத்தின்போது, சோலையம்மா இறந்து விடுவாள். அவளுக்கு பிறந்த குழந்தையை, சோலையம்மாவின் சகோதரியிடம் கொடுக்க வருவான், மாயாண்டி. அது என்னானது என்பது தான், படத்தின் திரைக்கதை.

படம் பார்க்க, தியேட்டருக்குள் நுழைந்தோமா இல்லை கிராமத்திற்குள் வந்துவிட்டோமா என்ற உணர்வை, ரசிகர்களுக்கு கொடுத்தது இப்படம். மாயாண்டியாக ராஜ்கிரணும், சோலையம்மாவாக மீனாவும் சால பொருத்தம்!

இப்படத்தின் வெற்றிக்கு, இளையராஜாவின் இசை தான் முக்கிய காரணம். 'பாரிஜாத பூவே, குயில் பாட்டு, பெண்மனசு ஆழமென்று, சோலைப் பசுங்கிளியே...' போன்ற பாடல்களில், மக்கள் கிறங்கினர்.

வடிவேலுவுக்கு, வாழ்க்கை தந்த படம் இது. இப்படத்தில், 'போடா போடா புண்ணாக்கு' என்ற பாடலையும், அவர் பாடியிருந்தார். இப்படம், தெலுங்கில் மொரத்தொடு நா மொகுடு என, 'ரீமேக்' செய்யப்பட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - கேப்டன் பிரபாகரன்மறக்க முடியுமா? - கேப்டன் பிரபாகரன் மறக்க முடியுமா? - வானமே எல்லை மறக்க முடியுமா? - வானமே எல்லை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in