Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - தளபதி

12 செப், 2020 - 14:43 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Thalapathy

படம் : தளபதி
வெளியான ஆண்டு : 1991
நடிகர்கள் : ரஜினி, மம்மூட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா, ஸ்ரீவித்யா
இயக்கம் : மணிரத்னம்
தயாரிப்பு : ஜி.வெங்கடேஷ்வரன்

இது சூர்யா சார்... உரசாதீங்க! ரஜினி எனும் கலைஞனிடம் இருந்து கழிவிரக்கம், தோழமை, காதல் பிரிவின் வலி, கோபம் என, பன்முக நடிப்புத் திறனை வெளிக்காட்டிய படம், தளபதி!

உலகமெங்கும், 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில், ஒரே நாளில் திரைக்கு வந்த முதல் தமிழ் மற்றும் தென்மாநில படம் தளபதி தான். தினசரி, நான்கு காட்சிகளை தவிர்த்து, ரசிகர்களுக்கு என சிறப்புக் காட்சி திரையிடும் புதிய நடைமுறையை அமல்படுத்திய பெருமையும், இப்படத்திற்கு தான்.
ரஜினி, முதல்முதலாக, 1 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றதும் இப்படத்திற்காகத் தான். மகாபாரதக் கதையை, சமகாலக் கதையாக மாற்றித் தந்தார், மணிரத்னம். கர்ணனாக, ரஜினி; துரியோதனனாக, மம்மூட்டி; குந்தி தேவியாக, ஸ்ரீவித்யா கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

நேற்றைய, மனிதன்; இன்றைய, தளபதி; நாளைய, மன்னன் என்ற அரசியல் போஸ்டர்கள், அப்போதே, ரசிகர்களால் ஒட்டப்பட்டன. இளையராஜா இசையில், வாலி அனைத்து பாடல்களையும் எழுதினார்.

யமுனை ஆற்றிலே, சுந்தரி கண்ணால், காட்டுக்குயிலு, புத்தம் புது பூ, சின்னத் தாயவள்... போன்ற பாடல்கள், தமிழகம் எங்கும் ரீங்காரமிட்டன. ராக்கம்மா கையத்தட்டு... பாடல், பி.பி.சி., நடத்திய வாக்கெடுப்பின் படி, உலகின் சிறந்த நான்காவது பாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

ரயிலின் ஓசை, சூரியனின் அந்திமம், ஏக்கப்பார்வை, காதலின் பிரிவு என்று அனைத்திற்கும் இசை கொடுத்து, தமிழர்களின் இதயங்களை உருக்கியிருந்தார் இளையராஜா. மல்லிகை பூ ஒன்றை எடுக்கும் காட்சி போதும், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் திறமையை பறைசாற்ற!

எப்போது பார்த்தாலும், புதிய பரிணாமம் தருகிறான், தளபதி!

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? சேரன் பாண்டியன்மறக்க முடியுமா? சேரன் பாண்டியன் மறக்க முடியுமா? - கேப்டன் பிரபாகரன் மறக்க முடியுமா? - கேப்டன் பிரபாகரன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

ems - chennai,இந்தியா
29 டிச, 2020 - 11:39 Report Abuse
ems ரஜினிக்கு நடிப்பு வராது என்று சொல்பவர்கள் இந்த படத்தை பார்த்து சொல்லட்டும். அருமையான நடிப்பு.
Rate this:
13 செப், 2020 - 07:44 Report Abuse
குமரன் பழனியில் ரமேஷ் தியேட்டரில் இந்த படம் பார்த்தது, இன்றும் இது ஒரு இனிய flashback
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in