நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு | கேரளாவில் தியேட்டர்கள் ஸ்டிரைக் | விருதுகளை பாத்ரூம் கதவின் கைபிடியாக்குவேன் : நசுருதீன் ஷா |
படம் : கோபுர வாசலிலே
வெளியான ஆண்டு : 1991
நடிகர்கள் : கார்த்திக், பானுப்ரியா, சுசித்ரா, நாசர், ஜனகராஜ், சார்லி, ஜூனியர் பாலையா
இயக்கம் : பிரியதர்ஷன்
தயாரிப்பு : எம்.கே.தமிழரசு
மலையாள இயக்குனர், பிரியதர்ஷன், தமிழ் சினிமாவில், சின்ன மணிக்குயில் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். ஆனால், அந்த திரைப்படம் திரைக்கு வரவில்லை. இதன் விளைவாக, கோபுர வாசலிலே அவரது அறிமுக தமிழ் திரைப்படமாக மாறியது. இப்படத்தை தயாரித்தது, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன், எம்.கே.தமிழரசு.
கடந்த, 1990ல், பாவம் பாவம் ராஜகுமாரன் என்ற மலையாள படத்திலிருந்து, சில காட்சிகள் கையாளப்பட்டு, இப்படம் உருவானது. பள்ளி ஆசிரியரான, மனோகர், கார் விபத்து ஒன்றில், தன் காதலியை இழந்து, விரக்தியில் வாழ்ந்து வருகிறார். அவரது ஊதியத்தில் வாழும் நண்பர்கள், ஊர் சுற்றித் திரிவர்.
இந்நிலையில், அவரது நண்பர்கள், பெண்களை கிண்டல் செய்ததால், கல்யாணி என்ற பெண்ணால், சிறைக்கு செல்வர். மனோகர், தன் நண்பர்களை கண்டிப்பார். இதனால் அவரது நண்பர்கள், 'கல்யாணி, உன்னை காதலிக்கிறார்' எனக் கூறி, மனோகரை ஏமாற்றுவர். ஆனால் எதிர்பாராத விதமாக, கல்யாணிக்கும், மனோகருக்கும் திருமணம் நிச்சயமாகும். மனோகரின் நண்பர்கள், தவறான தகவல் பரப்பி, திருமணத்தை தடுத்து விடுவர். இதனால், மனோகர் என்ன ஆனார், அவரின் காதல் என்ன ஆனது, நண்பர்கள் எங்கே சென்றனர் என்பதற்கான விடை தான், இப்படம்.
இப்படத்தில் இடம் பெற்ற, 'கேளடி என்...' என்ற பாடலில், பிரபல மலையாள நடிகர் மோகன்லால்- கவுரவ தோற்றத்தில் நடித்து இருப்பார். இப்படத்திற்கு, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இளையராஜாவின் இசையில், 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்...' உட்பட, அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகின.