மறுபிறவி ரகசியம் உடைக்கும் 'ஆன்மீக அழைப்பு' | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் பேய் படம் | மைதான் : அறியப்படாத இந்திய கால்பந்து அணியின் கதை | பிரியங்கா சோப்ராவை துரத்தியது கரண் ஜோஹர்தான்: கங்கனா குற்றச்சாட்டு | வெப் தொடரில் நடிக்கும் பிக்பாஸ் மணிகண்ட ராஜேஷ் | அரசியலுக்கு வரமாட்டேன் : விஜய் சேதுபதி பேட்டி | தியேட்டரில் நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத செயல் : கமல், வெற்றிமாறன் கண்டனம் | 5 மொழிகளில் மாஸ்டர் மகேந்திரனின் புதிய படம் | விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் மாயம் : மனைவி போலீஸில் புகார் | 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் 'நந்தினி' நித்யா ராம் |
படம் : ஆத்தா உன் கோயிலிலே
வெளியான ஆண்டு : 1991
நடிகர்கள் : செல்வா, கஸ்துாரி, வினுசக்கரவர்த்தி, கே.பிரபாகரன்
இயக்கம் : கஸ்துாரி ராஜா
தயாரிப்பு : அன்பாலயா பிலிம்ஸ்
'ஜாதிகள் இல்லையடி...' என்பது தான், ஆத்தா உன் கோயிலிலே படத்தின் கரு. மதுரை மாவட்டம், மல்லிகாபுரம் எனும் கிராமத்தில் வாழ்ந்து மறைந்த பெண் தெய்வத்தின் கதை தான், இப்படம். அக்கிராமத்தில் வாழும், டி.கே.எஸ்.சந்திரன் மகளான கஸ்துாரி, தன் வீட்டில் வேலை செய்யும் செல்வாவை விரும்புகிறாள். பல போராட்டங்களுக்கு பின், செல்வாவிற்கும், கஸ்துாரிக்கும் திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும், ஜாதி வெறியுடைய பஞ்சாயத்துத் தலைவரான, கே.பிரபாகரன், கஸ்துாரியை ஆணவ கொலை செய்து விடுகிறார். இந்நிலையில், கே.பிரபாகரனின் மகனும், ஏழைப்பெண்ணான வினோதினியும் காதலிக்கின்றனர். இவர்களின் காதலை, ஜாதி வெறியர்களின் எதிர்ப்புகளை மீறி, செல்வா வெற்றி பெறச் செய்கிறார்.
'மனிதன் உயிர் வாழ உணவு, உடை, உறைவிடம் தேவை; ஜாதி தேவையில்லை' என்ற வசனத்தோடு படம் நிறைவு பெறும். தமிழ் சினிமாவில், பெரிய ரவுண்ட் வந்திருக்க வேண்டியவர், நடிகர் செல்வா. ஆனால், நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே. ஜாதி வெறியர் அழகர்சாமியாக, தயாரிப்பாளர் கே.பிரபாகரன் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு சால பொருத்தம், அவர்.
தேவா இசையில், காளிதாசன் வரிகளில், 'ஏலே இளங்குயிலே, சின்னஞ்சிறு பூவே, ஒத்தையடி பாதையில, காதல் கிளிகளே, மாரி முத்துமாரி...' போன்ற பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.
தமிழகத்தில் இன்றும் ஆணவ கொலை நடந்து வருகிறது. வலிமையான திரைப்பட ஊடகம், அதற்கு எதிராக, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.