பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் | வெற்றி பட இயக்குனர் உடன் கைகோர்த்த பஹத் பாசில் | சாதனை மேல் சாதனை படைக்கும் 2018 படம் | மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் |
படம் : தர்மதுரை
வெளியான ஆண்டு : 1991
நடிகர்கள் : ரஜினி, கவுதமி, மது, நிழல்கள் ரவி, சரண்ராஜ்
இயக்கம் : ராஜசேகர்
தயாரிப்பு : எஸ்.ராமநாதன்
ரஜினி, மஞ்சுளா, ரமேஷ் அரவிந்த் நடிப்பில், காலம் மாறி போச்சு என்ற பெயரில், ராஜசேகர் இயக்கத்தில் படம் உருவாகத் துவங்கியது. ஆனால், சில நிர்ப்பந்தங்களால், அந்த கதை கைவிடப்பட்டு, 1989ல், விஷ்ணுவர்தன் நடிப்பில் வெளியான, தேவா என்ற கன்னட படத்தை, தர்மதுரை என்ற பெயரில், ரீமேக் செய்தனர்.
இப்படம், 1991ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், சில இடையூறுகளால், படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக, ரஜினி தொடர்ந்து, 72 மணி நேரம், இப்படத்திற்காக நடித்துக் கொடுத்தாராம். அதனால், அறிவித்தப்படி படம் பொங்கலுக்கு வெளியானது. படமும், மெகா ஹிட்டாக அமைந்தது.
அப்பாவியான தர்மதுரை, தன் தம்பிகள் இருவரால், சொத்துக்களை இழக்கிறார். அவர்களுக்காக, கொலை பழியை ஏற்றுக்கொண்டு, சிறைக்கு செல்கிறார். தம்பிகள் இருவரும், தன் தந்தை மற்றும் மகனை கொன்றவர்கள் என தெரிந்தும், அவர்களை, எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுகிறார். இது தான், படத்தின் கதை!
படம் முழுதும், ரஜினி மயம். கிராமத்து அப்பாவி இளைஞனாக, துறுதுறுவென துள்ளித் திரியும் ரஜினியை, அனைவருக்கும் பிடித்தது. இப்படம் தெலுங்கில், கைதி அன்னய்யா என, மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. ஹிந்தியில், தியாகி என்ற பெயரில், ரஜினி நடிக்க, ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின், 100 வது நாளில், இயக்குனர் ராஜசேகர் கார் விபத்தில் இறந்தார்.
இளையராஜா இசையில், ஆணென்ன பெண்ணென்ன, அண்ணன் என்ன தம்பி என்ன, மாசிமாசம் ஆளான பொண்ணு, சந்தைக்கு வந்த கிளி... பாடல்கள், அதிரி புதிரி ஹிட் அடித்தது.
ரஜினியின் திரைப்பயணத்தில், தர்மதுரைக்கும் முக்கிய இடம் உண்டு!