மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ் | மோகன்லால் படத்தால் தாமதமாகும் திலீப் பட வேலைகள் | கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப் | ராமன் அல்ல கர்ணன் ; ஆதிபுருஷ் பிரபாஸை விமர்சித்த கஸ்தூரி | டிம்பிள் ஹயாதி மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு | இளமைகால கவர்ச்சி படத்தை வெளியிட்ட ஜீனத் அமன் | லாந்தர்: விதார்த் நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் | கமலுக்கு வில்லன் ஆனார் எஸ்.ஜே.சூர்யா: அதிகாரப்பூர்வ தகவல் | ஓடிடியில் வெளியாகும் ரகுல் பிரீத் சிங் படம் | எனது காதலைக் கண்டுபிடித்தேன் - வருண் தேஜ் |
வெளியான ஆண்டு : 1991
நடிகர்கள் : கமல், ரேகா, ரோஷினி, ஜனகராஜ்
இயக்கம் : சந்தான பாரதி
தயாரிப்பு : சுவாதி சித்ரா இன்டர்நேஷனல்
'மனிதர்கள் உணர்ந்து கொள்ள, இது மனிதக் காதலல்ல' - இந்த, 'டயலாக்' தான், குணா படத்தின் கரு.மசாலா சினிமாவை மட்டும் கொண்டாடத் தெரிந்த தமிழ் ரசிகர்களுக்கு, கமலின் வித்தியாசமான சினிமா புரிவதில்லை. காலம் கடந்து, அவரின் படங்கள் கொண்டாடப்படும். அவ்வகையில், குணா படமும் ஒன்று!
ஆம், 1991 தீபாவளி அன்று வெளியான குணா படம், வசூல் ரீதியிலான வெற்றியை பெறவில்லை. ஆனால் என்றும், தமிழ் சினிமா வரலாற்றில், நினைவுகூரத்தக்க படமாக உள்ளது.மனநலம் பிறழ்ந்த நாயகன், 'அபிராமி' என்ற கற்பனை கதாபாத்திரத்தை விரும்புகிறான். ஒரு பெண்ணை, அபிராமி என நினைத்து, கடத்திச் சென்று, தன் காதலை உணரச் செய்கிறான். இருவரும் இணைந்தனரா என்பது தான், திரைக்கதை.
இப்படத்திற்கு முதலில், மதிகெட்டான் சோலை எனும் பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டது; பின், குணா என மாறியது.உலகில் இருக்கும், பிரபல சுற்றுலா பகுதிகளை தேடிச் சென்று, தமிழ் சினிமா படமாக்குகிறது. ஆனால், படப்பிடிப்பு நடந்த இடம், சுற்றுலா தலமாக மாறியது, குணாவின் வெற்றி. கொடைக்கானலில் இருந்த, 600 அடி ஆழமுள்ள குகையில், படப்பிடிப்பு நடந்தது. படம் வெளியான பின், அந்த இடம், 'குணா குகை' என்றழைக்கப்படுகிறது.