Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - சின்னத் தம்பி

05 செப், 2020 - 14:58 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Chinnathambi

படம் : சின்னத் தம்பி
வெளியான ஆண்டு : 1991
நடிகர்கள் : பிரபு, குஷ்பூ, கவுண்டமணி, ராதாரவி, மனோரமா
இயக்கம் : பி.வாசு
தயாரிப்பு : கே.பி., பிலிம்ஸ்

சில படங்களின் பிரமாண்ட வெற்றி, சினிமா விமர்சகர்களின் தலையை பிய்த்துக் கொள்ளச் செய்யும். அதில், சின்னத் தம்பி படமும் ஒன்று. இப்படம், ஒன்பது தியேட்டர்களில், 356 நாட்களும்; 47 தியேட்டர்களில், 100 நாட்களையும் தாண்டி ஓடியது!

எதுகை, மோனையோடு பாட்டு பாடும் கதாநாயகனுக்கு, தாலி பற்றி எதுவும் தெரியாது என்பது தான், படத்தின் அடிநாதம். இதைச் சுற்றித் தான், படத்தின் கதை பின்னப்பட்டிருக்கும். இப்படத்தின் அசுர வெற்றிக்கு, பி.வாசுவின் இயக்கம் தான் காரணம். நகைச்சுவை, பாடல்கள், சென்டிமென்ட் ஆகியவற்றை, சம அளவில் கலந்து கொடுத்திருந்தார்.

பி.வாசுவின் மகன் சக்தி, முதன்முறையாக இப்படத்தில், சிறு வயது பிரபுவாக நடித்திருந்தார். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவராக கவுண்டமணி இடம்பெற்ற காமெடி காட்சிகள், படத்திற்கு பெரும் பலத்தைச் சேர்த்தது.

இளையராஜாவின் இசையில், பாடல்களை, கங்கை அமரன், வாலி ஆகியோர் எழுதியிருந்தனர். இப்படத்தில் பாடல்கள் மட்டும், 35 நிமிடங்கள் இடம் பெற்றன. துாளியிலே ஆட வந்த, போவோமா ஊர்கோலம், அட உச்சந்தல, குயிலப் புடிச்சி, அரைச்ச சந்தனம், நீ எங்கே என் அன்பே... பாடல்கள், தமிழர்களின் செவிகளில் தேன் பாய்ச்சியது. இப்படத்தின் பாடல்களுக்கு, அரை மணி நேரத்தில், இளையராஜா இசை அமைத்தாராம்!

சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகர், நடிகை, ஒளிப்பதிவாளர், பாடகர், பாடகி என, தமிழக அரசின் ஏழு விருதுகளை இப்படம் பெற்றது. இப்படம், கன்னடத்தில், ராமாச்சாரி; தெலுங்கில், சந்தி; ஹிந்தியில், ஆனாரி என, ரீமேக் செய்யப்பட்டது.

வெள்ளந்தியான சின்னத் தம்பி, தமிழர்களின் நெஞ்சங்களில் நிறைந்தான்!

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - புது நெல்லு புது நாத்துமறக்க முடியுமா? - புது நெல்லு புது ... மறக்க முடியுமா? குணா மறக்க முடியுமா? குணா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

chennai sivakumar - chennai,இந்தியா
05 செப், 2020 - 17:50 Report Abuse
chennai sivakumar Reasons for mega success sings,location and direction. Thaali sentiment story took the film to the greatest level.
Rate this:
Jagan - ,
07 செப், 2020 - 14:55Report Abuse
Jaganone of the main reason for the success is Kushboo and her beauty and this movie made her unbeatable in Tamil cinema....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Ponniyin Selvan
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in