அட்லீ - பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | கடைசி கட்ட ஓட்டத்தில் 'வாரிசு, துணிவு' | விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் - அடுத்தடுத்து வந்த அப்டேட்கள் | ஒழுங்கா வேலைய பாரு : ரசிகருக்கு ரஜினி அறிவுரை | திருப்பதி அருகே இந்தியன் 2 படப்பிடிப்பு : ஹெலிகாப்டரில் சென்று இறங்கிய கமல் | குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா நிறுவனம் | அமானுஷ்யத்தின் பக்கங்களை புரட்டும் ‛கருங்காப்பியம்' : டிரைலர் வெளியீடு | திருமணநாளில் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.ஏ.சந்திரசேகர் | வட இந்தியர்கள், தென்னிந்திய படங்களை விரும்பி பார்க்கிறார்கள்: சந்தீப் கிஷன் | 'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் |
படம் : அஞ்சலி
வெளியான ஆண்டு : 1990
நடிகர்கள் : ரகுவரன், ரேவதி, பிரபு, ஷாமிலி
இயக்கம் : மணிரத்னம்
தயாரிப்பு : ஜி.வெங்கடேஸ்வரன்
கடந்த, 1991ல், நம் நாட்டில் இருந்து, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம், அஞ்சலி! இது, இசையமைப்பாளர் இளையராஜாவின், 500வது படம். மவுன ராகம் படத்தின் தொடர்ச்சி என அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய படம் தான், அஞ்சலி. ஆம்... ரகுவரன் கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க இருந்தவர், மோகன்.
கணவன் மீது சந்தேகப்படும் மனைவி, ரகசியம் ஒன்றை அறிகிறார். அது, அவருக்கு பிறந்த குழந்தை, ஆசிரமத்தில் வளர்கிறது என்பதே. மன வளர்ச்சி குன்றிய, அந்த குழந்தை, ரகுவரன் வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறது. அக்குழந்தையை ஏற்க மறுக்கும் பிற சிறார்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், மெல்ல, அதன் மீது அன்பு செலுத்துகின்றனர். இறுதியில், அக்குழந்தை மரணத்தை சந்திக்கிறது என்பது தான், கதைக்களம்.
குழந்தைகளை கண் முன் நிறுத்தி, உணர்வுபூர்வமான, நெகிழ்ச்சியான படத்தைக் கொடுத்து, எண்ணற்ற விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றார், மணிரத்னம். பிரபு, சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார். நடிகை பானுப்ரியாவின் தங்கை, நிஷாந்தி, இரவு நிலவு... என்ற பாடலிலும் இடம் பெற்றிருப்பார்.
மணிரத்னம் என்றாலே, காட்சி வழியே, கதை சொல்லும் வித்தைக்காரர் தானே. இப்படத்தின் ஒளிப்பதிவாளர், மது அம்பத். ஷாமிலி, கையில் இலையை ரசிக்கும் காட்சி, இப்போதும் நம் கண்ணுக்குள் நிற்கிறது. சபாஷ், மது அம்பத்!
இளையராஜா இசையில், வாலியின் வரிகளில், வானம் நமக்கு, மொட்ட மாடி, இரவு நிலவு, அஞ்சலி அஞ்சலி, சம்திங் சம்திங், ராத்திரி நேரத்தில், வேகம் வேகம்... என, அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன.
தமிழ் சினிமாவின் செல்லக் குழந்தை, அஞ்சலி!