Advertisement

சிறப்புச்செய்திகள்

உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறாரா சமந்தா? | ராம்சரணின் அடுத்தபடம் அறிவிப்பு | காஷ்மீர் பைல்ஸ் விமர்சனம் : உண்மைக்கு முன் பொய் தாக்குப் பிடிக்காது - அனுபம் கேர் காட்டம் | திருமணத்திற்கு தயாராகிறாரா கீர்த்தி சுரேஷ் : மீண்டும் பரவிய செய்தி | திருமணநாளில் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ரோபோ சங்கர் | சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு | நயன்தாராவின் ‛கோல்டு' சென்சார்- ரன்னிங் டைம் வெளியானது | 'புஷ்பா' ரஷ்ய மொழி டிரைலர் வெளியீடு | 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் : கோவா பட விழாவில் தேர்வு குழு அதிருப்தி | ஒரு படம் ரூ.200 கோடி வசூலித்தால் தயாரிப்பாளருக்கு என்ன கிடைக்கும்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - புலன் விசாரணை

29 ஆக, 2020 - 13:21 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Pulan-Visaranai

படம் : புலன் விசாரணை
வெளியான ஆண்டு: 1990
நடிகர்கள்: விஜயகாந்த், ரூபினி, ஆனந்த்ராஜ், சரத்குமார், ராதாரவி
இயக்கம்: ஆர்.கே.செல்வமணி
தயாரிப்பு: சுந்தர்ராஜ், எஸ்.ரவீந்திரன்

ஆட்டோ சங்கர் என்ற பிரபல ரவுடி, 1987ல், ஒன்பது பேரை, அடுத்தடுத்து கடத்தி, கொலை செய்து, உடல்களை, அவனது வீட்டினுள் தளத்தில் புதைத்தான். இவ்வழக்கு, அந்நாளில் பரபரப்பாக இருந்தது. ஆட்டோ சங்கர் கதையையும், அர்னால்ட் நடித்த, கமாண்டோ என்ற ஹாலிவுட் படத்தையும் சரி விகிதத்தில் கலந்து எடுத்த படம் தான், புலன் விசாரணை.

பரபரப்பான திரைக்கதை, அதிரடி வசனங்கள் மற்றும் தெளிவான இயக்கத்தால், இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்திலிருந்து தான், விஜயகாந்த், தமிழ் சினிமாவின் நிரந்தர போலீஸ் அதிகாரி நடிகராகி விட்டார். ஆட்டோ டிரைவரான ஆனந்தராஜ், இளம் பெண்களை கடத்தி சென்று, அரசியல்வாதி ராதாரவியின் காமபசிக்கு விருந்தளிக்கிறார். ஒரு, எம்.எல்.ஏ.,வின் கொலை குறித்து விசாரிக்கும், டி.ஜி.பி., விஜயகாந்த், அரசியல் அழுத்தத்தால், இடைநீக்கம் செய்யப்படுகிறார். சில ஆண்டுகளுக்கு பின், கவர்னர் ஆட்சி அமையும்போது, அவர் மீண்டும் பொறுப்பேற்கிறார். இளம்பெண்கள் கடத்தல் வழக்கு, அவருக்கு வருகிறது. குற்றவாளிகளை, அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தான் பரபரப்பான திரைக்கதை.

ஆட்டோ சங்கர் பாதிப்பில் உருவான, தர்மா என்ற கதாபாத்திரத்தில், ஆனந்தராஜ் நடித்திருப்பார். இளையராஜா இசையில், பின்னணி இசை, ரசிகர்களை பயமுறுத்தியது. இப்படம் 150 நாட்களுக்கு மேல், வெற்றிகரமாக ஓடியது. இப்படம், பல்வேறு மொழிகளில், 'ரீமேக்' செய்யப்பட்டது.மணிவண்ணனின் உதவியாளரான, ஆர்.கே. செல்வமணி, இப்படத்தின் மூலம், இயக்குனராக உயர்ந்தார். பிரசாந்த் நடிப்பில், 2005ல், புலன் விசாரணை - 2 படத்தை செல்வமணி இயக்கினார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - புரியாத புதிர்மறக்க முடியுமா? - புரியாத புதிர் மறக்க முடியுமா? - அஞ்சலி மறக்க முடியுமா? - அஞ்சலி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Adi -  ( Posted via: Dinamalar Android App )
30 ஆக, 2020 - 12:10 Report Abuse
Adi Sarathkumar become very famous in this movie
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in