Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - புரியாத புதிர்

29 ஆக, 2020 - 13:14 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Puriyatha-puthir

படம் : புரியாத புதிர்
வெளியான ஆண்டு : 1990
நடிகர்கள் : ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா, சித்தாரா
இயக்கம் : கே.எஸ். ரவிக்குமார்

தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ் புதிய பாதை அமைத்த, பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விக்ரமன், அழகான புது வசந்தம் கொடுத்தார். அவரிடம் பணியாற்றிய, கே.எஸ்.ரவிகுமார், திகிலான புரியாத புதிர் தந்தார்!

தயாரிப்பாளர்களின் இயக்குனர் என பெயரெடுத்தவர், கே.எஸ்.ரவிக்குமார். தன் முதல் படத்தை, 29 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில், 30 நாட்களில் முடித்துக் கொடுத்தார். படம், முதலுக்கு மோசத்தை தரவில்லை. இது, 1973ல் ஹிந்தியில் வெளியான, தன்ட் என்னும் திரைப்படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டது. ரேகா, தன் கணவரான ரகுவரனை, ஏன் கொன்றார்; அந்த ராத்திரியில், ஆனந்த்பாபு அங்கு ஏன் வந்தார்; சிறையில் இருந்து, ரகுமான் ஏன் தப்பி வந்தார்; அவர் சிறைக்குச் செல்ல என்ன காரணம் என்ற பல புரியாத புதிர்களுக்கெல்லாம், விடை கொடுத்திருந்தார், கே.எஸ்.ரவிகுமார்.

இப்படத்தில், மனைவியை கொடூரமாக, 'டார்ச்சர்' செய்யும், 'சைக்கோ' வேடத்தில் ரகுவரன் நடித்திருந்தார். அதுவரை, வில்லனுக்கு என, தமிழ் சினிமா வகுத்திருந்த இலக்கணத்தை, ரகுவரன் உடைத்தெறிந்தார். 'கோட் - சூட்' உடை, அழுத்தமான பேச்சு என, ரசிகர்களை மிரளச் செய்தார். 'ஐ நோ' என்ற ஒரே டயலாக்கை, பல்வேறு விதங்களில் கூறி, தியேட்டரை ஆர்ப்பரிக்கச் செய்தார்.

இப்படத்தில், எப்போதும் பதட்டத்துடனும், பயத்துடனும், குழப்பத்துடனும் நடித்திருக்கிற ரேகாவுக்குத் தான் முதலிடம். அற்புதமான நடிகையை, தமிழ் சினிமா முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என, எண்ணம் தோன்றுகிறது. இன்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த படம், அந்நாளில் வெற்றி பெறவில்லை. தமிழ் சினிமா உலகம், என்றும் புரியாத புதிர் நிறைந்தது!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - புது வசந்தம்மறக்க முடியுமா? - புது வசந்தம் மறக்க முடியுமா? -  புலன் விசாரணை மறக்க முடியுமா? - புலன் விசாரணை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
29 ஆக, 2020 - 15:34 Report Abuse
Mirthika Sathiamoorthi இதன் தோல்வி, இயக்குனர் ரூட்டை மாற்றி சேரன்பாண்டியனை கொடுக்கவைத்தது...அதை விடுங்க, ஓடாதபடமெல்லாம் மறக்காம சொல்லும் நீங்க வெள்ளிவிழா படம் பாட்டி சொல்லைத்தட்டாதே எப்புடி மறந்தீங்க...வித்தியாசமான கதை களங்களை அலசி ஆராயும் ஆசிரியர் வித்தியாசமான கதையுடன் வந்த ஊரைதெருஞ்சுகிட்டேனை எப்புடி மறந்தீங்க.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Ponniyin Selvan
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,ஐஸ்வர்யா ராய்,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in