Advertisement

சிறப்புச்செய்திகள்

கவுதம் கார்த்திக்கின் ‛ஆகஸ்ட் 16 1947' பட டீசரை வெளியிட்ட சிம்பு! | ஸ்பெயின் நாட்டில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட நயன்தாரா -விக்னேஷ் சிவன் | விஜய்யின் 67வது படத்தில் இணைந்த கவுதம் மேனன் | விடுதலையில் நானே வேறொருவனாக தெரிகிறேன்: சூரி பேச்சு | கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை: வாணி போஜன் | நீங்கள் தெய்வக்குழந்தை அப்பா: 47 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு மகள் வாழ்த்து | நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை | பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்... வைரலாகும் வீடியோ! | 'லால் சிங் சத்தா' தோல்வி, அழைப்புகளைத் தவிர்க்கும் ஆமீர்கான் | மிருணாள் தாகூர் புகைப்படங்களைத் தேடும் ரசிகர்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - புது வசந்தம்

29 ஆக, 2020 - 13:08 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---pudhuvasantham

படம் : புது வசந்தம்
வெளியான ஆண்டு : 1990
நடிகர்கள் : முரளி, சித்தாரா, ஆனந்த் பாபு, ராஜா, சார்லி
இயக்கம் : விக்ரமன்
தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ்

ஆணும், பெண்ணும் நட்பாக இருக்க முடியும் என்பதை வலியுறுத்திய படம் தான், புது வசந்தம். இதற்கு முன், இப்படிப்பட்ட கதையம்சத்துடன், தமிழில் எந்த படமும் வந்ததில்லை. புதிய பாதை என்ற அறிமுகப் படத்திலேயே, தேசிய விருது பெற்ற பார்த்திபனிடம், உதவியாளராக பணியாற்றியவர், விக்ரமன். இவர் இயக்கிய முதல் படமான, புது வசந்தம் பெரும் வெற்றி பெற்றதுடன், மாநில அரசின் விருதையும் வென்றது.

முரளி, ஆனந்த்பாபு, ராஜா, சார்லி ஆகிய நான்கு நண்பர்களின் கூட்டத்தில், எதிர்பாராத வசமாக, கவுரி வந்து சேர்வாள். வறுமையிலும், அந்த நட்புக் கூட்டம், சிறகடித்து பறக்கும். கவுரியின் காதலன், நண்பர்களை சந்தேகப்படுவான். நட்பா, காதலா என்ற நிலையில், கவுரி என்ன முடிவெடுத்தாள் என்பது தான், திரைக்கதை.

ஆழமிக்க கதை, எளிய திரைக்கதை, தாளம் போடச் செய்த பாடல்கள் என, ரசனையான கலவையில் வெளியாகி, தமிழ் குடும்பங்களின் பேராதரவைப் பெற்றது, புது வசந்தம். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில், 'ஆயிரம் திருநாள், கவுரிக்கு கல்யாணம், இது முதல் முதலா, 'பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா, போடு தாளம் போடு...' உள்ளிட்ட பாடல்கள், ஹிட் வரிசையில் இடம் பெற்றன.

விக்ரமனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர், கே.எஸ்.ரவிக்குமார். தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகள், இப்படத்திற்கு கிடைத்தன. இப்படம், சுருதி வித் சுனில் என, கன்னடத்திலும்; பஹரோன் கே மன்சில் என, ஹிந்தியிலும், 'ரீமேக்' செய்யப்பட்டது.தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கியது, புது வசந்தம்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - பணக்காரன்மறக்க முடியுமா? - பணக்காரன் மறக்க முடியுமா? - புரியாத புதிர் மறக்க முடியுமா? - புரியாத புதிர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in