Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' | நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கத்திற்கு நடிகர் உதயா கண்டனம் | கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு | முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - பணக்காரன்

25 ஆக, 2020 - 09:25 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Panakkaran

படம் : பணக்காரன்
வெளியான ஆண்டு : 1990
நடிகர்கள் : ரஜினி, கவுதமி, விஜயகுமார், சரண்ராஜ், ராதாரவி
இயக்கம் : பி.வாசு
தயாரிப்பு : சத்யா மூவீஸ்

ஆண்டுக்கு, எட்டு முதல், 15 படங்கள் வரை நடித்த வந்த ரஜினி, 1990 முதல், படங்களின் எண்ணிக்கையை குறைக்கத் துவங்கினார். 1990ல், இரு படங்களில் மட்டும் நடித்தார். அதில் ஒன்று, பணக்காரன். இது, அமிதாப் பச்சன் நடித்த, லாவாரிஸ் என்ற ஹிந்தி படத்தின், ரீமேக் ஆகும்.

ரஜினியும், பி.வாசுவும் இணைந்த முதல் படம் இது. இதை தொடர்ந்து, மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி, குசேலன் உள்ளிட்ட படங்களை, இருவரும் இணைந்து உருவாக்கினர். ஏழையாக குடிகார வளர்ப்பு தந்தையிடம் வளரும் ரஜினி, ஒருகட்டத்தில் தன் நிஜ தந்தையிடமே அப்பா என தெரியாமலே வேலைக்கு சேருகிறார். பெரும் பணக்காரர் ஆன அவரது உயிருக்கு மற்றொரு மகன், உறவுகளால் ஆபத்து வர, இந்த சதியை எப்படி முடியடித்தார் என்பதுடன் ரஜினி இறுதியில் தன் தாய் - தந்தை குறித்து அடையாளம் காண்பது தான், கதைக்களம். காதல், பாசம், ஆக்ஷன, காமெடி என கலந்துகட்டி இப்படத்தை கொடுத்தார் வாசு.

படத்திற்கு இசை, இளையராஜா. '100 வருஷம், இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்...' என்ற பாடல் ஒலிக்காத திருமண வீடுகளே இல்லை எனலாம். ரஜினி, இப்பாடலில், பெண் வேடத்தில் தோன்றி, ரசிகர்களின் கைத்தட்டல்களை பெற்றார். 'உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி, மரத்தை வச்சவன்...' போன்ற பாடல்களும் வெற்றி பெற்றன.

ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர், கவுதமி. இருவரும், கடிகார முட்களுடன் இணைந்து பாடும், 'இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது...' என்ற பாடல், புதுமையாக படமாக்கப்பட்டிருந்தது. புவனா ஒரு கேள்விக்குறி படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்த சுமித்ரா, இப்படத்தில் அம்மாவாக நடித்திருந்தார். வசூல் வேட்டை நடத்திய இப்படம், கோண்டவீடி புலி என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகி, வெற்றி பெற்றது.

பணம் படைத்தவன் அல்ல; நல்ல மனம் படைத்தவன் தான், பணக்காரன்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - சத்ரியன்மறக்க முடியுமா? - சத்ரியன் மறக்க முடியுமா? - புது வசந்தம் மறக்க முடியுமா? - புது வசந்தம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in