Advertisement

சிறப்புச்செய்திகள்

உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்கிறாரா சமந்தா? | ராம்சரணின் அடுத்தபடம் அறிவிப்பு | காஷ்மீர் பைல்ஸ் விமர்சனம் : உண்மைக்கு முன் பொய் தாக்குப் பிடிக்காது - அனுபம் கேர் காட்டம் | திருமணத்திற்கு தயாராகிறாரா கீர்த்தி சுரேஷ் : மீண்டும் பரவிய செய்தி | திருமணநாளில் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ரோபோ சங்கர் | சென்னை விமான நிலையத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு | நயன்தாராவின் ‛கோல்டு' சென்சார்- ரன்னிங் டைம் வெளியானது | 'புஷ்பா' ரஷ்ய மொழி டிரைலர் வெளியீடு | 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் : கோவா பட விழாவில் தேர்வு குழு அதிருப்தி | ஒரு படம் ரூ.200 கோடி வசூலித்தால் தயாரிப்பாளருக்கு என்ன கிடைக்கும்? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - சத்ரியன்

24 ஆக, 2020 - 09:06 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Sathriyan

படம் : சத்ரியன்
வெளியான ஆண்டு : 1990
நடிகர்கள் : விஜயகாந்த், பானுப்ரியா, ரேவதி, திலகன்
இயக்கம் : கே.சுபாஷ்
தயாரிப்பு : மணிரத்னம்

இன்று, தெறி படத்தைப் பற்றி பார்க்கலாம்... ஸாரிங்க... சத்ரியன் படத்தைப் பற்றி நினைவு கூறலாம். இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில், அவரது உதவியாளர், கே.சுபாஷ், இப்படத்தை இயக்கினார். இரட்டை இயக்குனர்களான, கிருஷ்ணன் -- பஞ்சு ஜோடியில், கிருஷ்ணனின் மகன் தான், சுபாஷ். இப்படம், தமிழ் சினிமாவில், போலீசுக்கு என, புது இலக்கணமும் படைத்தது. இரண்டே பாடல்கள், நறுக்கென வசனங்கள், பரபரப்பான திரைக்கதை, நச்சுன்னு ஒரு, ப்ளாஷ்பேக் என, டிரெண்ட் செட்டர் படமாக வெளிவந்தது, சத்ரியன். இப்படத்தின் திரைக்கதையை எழுதியது, மணிரத்னம்.

போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜயகாந்தின் மனைவியை, வில்லனான திலகன் கொலை செய்துவிடுவார். இதனால் விரக்தி அடையும் விஜயகாந்த், போலீஸ் வேலையில் இருந்து விலகி, தன் குழந்தையுடன், தனிமையில் வசிப்பார். விஜயகாந்தை, மீண்டும் போலீஸ் வேலைக்கு இழுப்பார், வில்லன். இறுதியில், வில்லனை கொன்று, பழிவாங்குவார். இது, சத்ரியன் படத்தின் கதை.

இப்படத்தின் வழியாகத் தான், தமிழில், திலகன் அறிமுகமானார். தமிழ் சினிமா ரசிகர்கள், இப்படத்தில், ஹீரோவை விட, வில்லனை அதிகம் ரசித்தனர் என்றால், அதற்கு, திலகனின் நடிப்பும், குரலும் தான் காரணம். வரணும்... பழைய பன்னீர் செல்வமா வரணும் எனும், அவரின் வில்லத்தனம், அன்று கொண்டாடப்பட்டது.

இப்படத்தில், விஜயகாந்த் சிறுவயது கதாபாத்திரமாக நடித்தவர், அஜித் நடிப்பில், பில்லா படத்தை இயக்கிய, விஷ்ணு வர்தன்!

இளையராஜா இசையில், மாலையில் யாரோ மலரோடு... பாடல், இன்றும் நேயர் விருப்பங்களில் ஒன்றாக இருக்கிறது. சத்ரியனுக்கு சாவே கிடையாது... யாரோ ஒரு இயக்குனர், அதை, ரீமேக் செய்து விடுவார்!

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - மைக்கேல் மதன காம ராஜன்மறக்க முடியுமா? - மைக்கேல் மதன காம ... மறக்க முடியுமா? - பணக்காரன் மறக்க முடியுமா? - பணக்காரன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

bharathiraja - Dindigul,இந்தியா
24 ஆக, 2020 - 09:21 Report Abuse
bharathiraja Malayil yedho ila Malayil yaro manathodu.
Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
24 ஆக, 2020 - 09:20 Report Abuse
chennai sivakumar Undoubtedly the voice, action and body language of late Thilakan is still being remembered by the viewers. Actually after MN Nambiar avargal Thilakan sir was the most suited actor for Villan roles. Unfortunately he is also no more.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in