'விக்ரம் 3'க்கும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குநர்: கமல் | பியூட்டி கம்மிங் ஒத்து : ரம்யா கவுடாக்கு ஆர்மி ரெடி | தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ் | விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட உத்தரவு | ‛வீரன்'-ஆக களமிறங்கிய ஆதி | தனுஷ் பிறந்தநாளில் திரைக்கு வரும் திருச்சிற்றம்பலம் | 12 நாட்களில் 100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் டான் | விஜய்யின் 68வது படத்தை இயக்கும் அட்லி | கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு | ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கவுதம் கார்த்திக் நடிக்கும் ‛1947 ஆகஸ்ட் 16' |
படம் : மைக்கேல் மதன காம ராஜன்
வெளியான ஆண்டு : 1990
நடிகர்கள் : கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், நாசர்
இயக்கம் : சிங்கீதம் சீனிவாசராவ்
தயாரிப்பு : பி.ஏ.ஆர்ட்., புரொடக்ஷன்ஸ்
தமிழ் சினிமாவில் திரைக்கதை, நடிப்பு, வசனம், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என, அனைத்திலும் உச்சம் தொட்ட படங்களில் ஒன்று, மைக்கேல் மதன காம ராஜன்!
இப்படத்தில், கமலுக்கு, நான்கு வேடங்கள். திருடன், மைக்கேல்; தொழிலதிபர், மதனகோபால்; சமையல்காரர், காமேஷ்வரன்; தீயணைப்பு வீரர், ராஜு. அனைத்திலும் வித்தியாசம் காட்டியிருப்பார், கமல். ஒரு கதாபாத்திரத்தில் இருந்து, இன்னொரு கதாபாத்திரத்திற்கு நகரும் காட்சியில், கமலின் திரைக்கதை பிரமிக்க செய்யும். படத்தில் பலங்களில் ஒன்று, கிரேஸி மோகனின் வசனம். மாண்புமிகு குத்துவிளக்கை அமைச்சர் ஏற்றி வைப்பார் என, கிடைத்த இடத்தில் எல்லாம், சிக்ஸர் அடித்தார்.
கவுரிசங்கரின் ஒளிப்பதிவு வித்தையை, கிளைமேக்ஸ் காட்சியில் அறியலாம். இளையராஜா இசையில், ரம் பம் பம் ஆரம்பம், சிவராத்திரி, சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும், பேரு வச்சாலும் வைக்காம போனாலும்... உள்ளிட்ட பாடல்கள், செம ஹிட் அடித்தன.
கத கேளு கத கேளு... என்ற படத்தின் துவக்க பாடலில், பயாஸ்கோப் படம் காண்பிப்பவர், இயக்குனர், சிங்கீதம் சீனிவாசராவ்!
மகாபாரதம், டிவி சீரியலில் நடித்த, பீமன் ரகு, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார். அட, பீம் பாய்... பீம் பாய் அவரு தாங்க! ஊர்வசி, நாகேஷ் ஆகியோர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில், வேறொருவரை நினைத்தே பார்க்க முடியாது. இப்படத்தின் உதவி இயக்குனராக, குஷ்பு பணிபுரிந்தார்.
எத்தனையோ ஆச்சரியங்களை அள்ளித் தந்தனர், மைக்கேல் மதன காம ராஜன்!