Advertisement

சிறப்புச்செய்திகள்

ரியாவுக்கு ஜாமீன் தரக்கூடாது ; போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை தீவிரம் | ஒரே தட்டில் சாப்பிட்ட நித்யா மேனன்-அசோக் செல்வன் | தலைவிக்காக தீவிர நடன பயிற்சியில் கங்கனா | பாக்கியலட்சுமிக்கு ஆதரவு குரல் கொடுத்த லிசி | கனவுக்கு உயிர் கொடுத்தவர் சசிகுமார்: பாண்டிராஜ் நெகிழ்ச்சி | ஆஸ்கர் வாங்கினாலும் நல்ல பாடல்களை கொடுக்கவில்லையென்றால் ரசிகர்கள் தூக்கியெறிந்து விடுவர்: ஏ.ஆர்.ரஹ்மான் | அவதார் 2 நிறைவு, அவதார் 3 95 சதவீதம் நிறைவு - ஜேம்ஸ் கேமரூன் | லாபம் ஷுட்டிங்கிற்கு வந்த விஜய் சேதுபதி | 'சைலன்ஸ்' - அனுஷ்கா கொடுத்த அதிர்ச்சி | எஸ்பிபி மறைவும், தொடரும் தேவையற்ற சர்ச்சைகளும்... |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - அபூர்வ சகோதரர்கள்

12 ஆக, 2020 - 19:34 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Apoorva-sagodharargal

படம் : அபூர்வ சகோதரர்கள்
வெளியான ஆண்டு : 1989
நடிகர்கள் : கமல், கவுதமி, மனோரமா, ஸ்ரீவித்யா, ஜெய்சங்கர், நாகேஷ்
இயக்கம் : சிங்கீதம் சீனிவாச ராவ்
தயாரிப்பு : ராஜ்கமல் பிலிம்ஸ்

கடந்த, 1949ல், எம்.கே.ராதா நடிப்பில் வெளியான படம், அபூர்வ சகோதரர்கள். படத்தின் பெயரைத் தவிர, அதற்கும், கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்பாவைக் கொன்றோரை, பழிவாங்கும் மகன் என்ற, அரதபழசான கதை தான். இதில் கதாநாயகன், குள்ளமானவன் என்ற சுவாரஸ்யமான கதாபாத்திரம், படத்தை துாண் போல தாங்கியது.

'ஜெமினி சர்க்கஸில்' கோமாளியாக இருக்கும், அப்பு தான், ஹீரோ. இவர் செய்யும் கொலைக்கு, இவரது தம்பி, கார் மெக்கானிக், ராஜா சிக்கிக் கொள்கிறார். இப்படத்தின் கதை, முதலில் வேறுமாதிரியாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. அதில், மனோரமாவுக்கு பதிலாக, காந்திமதி நடித்திருந்தார். படப்பிடிப்பு நடந்த சில நாட்களிலேயே 'ஏதோ இடிக்கிறது' என, கமல் யோசித்தார். பஞ்சு அருணாசலத்தின் உதவியை நாடினார். அவர், கதைக்கு, 'பட்டி, டிங்கரிங்' பார்த்துக் கொடுத்தார். கிரேஸி மோகன், இப்படத்தின் மூலம், வசனகர்த்தாவா, சினிமாவில் அறிமுகமானார். அவரின் வசனங்கள், கைத்தட்டல்களை அள்ளின.

கான்ஸ்டபிள் சம்பந்தமாக, ஆர்.எஸ்.சிவாஜி பேசும், 'சார், நீங்க எங்கயோ போய்டீங்க...' என்ற வசனம், இன்று வரை பிரபலம்.கமலை, குள்ளனாக காட்டியதில், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு பிரமிக்க செய்தது. இன்றும், அந்த காட்சிகள் ஆச்சரியம் அளிக்கின்றன.

இளையராஜாவின் இசையில், 'உன்ன நினைச்சேன் பாட்டுப் படிச்சேன், புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா, ராஜா கைய வைச்சா, வாழ வைக்கும் காதலுக்கு ஜே, அண்ணாத்தே ஆடுறார்...' என, அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

அபூர்வ சகோதரர்கள் பார்த்து, மெர்சல் ஆனோர் நிறைய பேர்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - தர்மத்தின் தலைவன்மறக்க முடியுமா? - தர்மத்தின் தலைவன் மறக்க முடியுமா? - நாளைய மனிதன் மறக்க முடியுமா? - நாளைய மனிதன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in