Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - உன்னால் முடியும் தம்பி

08 ஆக, 2020 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Unnal-Mudiyum-Thambi

படம் : உன்னால் முடியும் தம்பி
வெளியான ஆண்டு : 1988
நடிகர்கள் : கமல், ஜெமினி கணேசன், சீதா, மனோரமா
இயக்கம் : கே.பாலசந்தர்
தயாரிப்பு : கவிதாலயா

கடந்த, 1988ல் தெலுங்கில், பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம், ருத்ரவீணை. சிரஞ்சீவி, ஷோபனா, ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்தனர். இதை, அதே ஆண்டு தமிழில், உன்னால் முடியும் தம்பி என, கமல் நடிப்பில் உருவாக்கினார், கே.பாலசந்தர். இரு படங்களுக்கும், இளையராஜா தான் இசை. ருத்ரவீணைக்கு சிறந்த இசை உட்பட, மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன.

பிரபல சமூக சேவகர், எம்.எஸ்.உதயமூர்த்தி, இயக்குனர், கே.பாலசந்தரின் கல்லுாரித் தோழர். அவரது, 'உன்னால் முடியும் நம்பு' என்ற சொற்றொடரையே, சற்று மாற்றி, உன்னால் முடியும் தம்பி என, படத்திற்கு பெயர் வைத்ததுடன், கதாநாயகனுக்கு, 'உதயமூர்த்தி' என்று பெயரிட்டார், கே.பாலசந்தர்.

பிரபல இசை கலைஞரான, - பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையின் இளைய மகனான உதயமூர்த்தி, சங்கீதத்தை விட, மனிதாபிமானமே உயர்ந்தது என்ற கொள்கை உடையவன். தந்தையும், மகனும் எதிரெதிர் கொள்கையில் வாழ, மது போதையில் அடிமையாகி இருக்கும் கிராம மக்களை மீட்க, தன் மனைவியுடன் களமிறங்கி, உதயமூர்த்தி போராடுகிறான். அவன் எதிர்கொண்ட போராட்டங்கள் என்ன, அதில் வெற்றி பெற்றனா என்பது தான், திரைக்கதை.

பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையாக, ஜெமினி கணேசன் வாழ்ந்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு உரிய கண்டிப்பையும், கோபத்தையும் கண்களிலேயே வெளிப்படுத்தி இருப்பார்.

கே.பாலசந்தரின் படத்தில், கதாநாயகிக்கு உரிய முக்கியத்துவம் இருக்கும். இதில், சமூக போராளியாக சீதா, 'பின்னி'யிருப்பார். புலமைப்பித்தன், முத்துலிங்கம் ஆகியோர் பாடல்களை எழுதினர். 'என்ன சமையலோ...' என்ற பாடலை, இளையராஜா எழுதினார். 'அக்கம் பக்கம் பாரடா, இதழில் கதை, மானிட சேவை, புஞ்சை உண்டு, உன்னால் முடியும் தம்பி...' என, அனைத்து பாடல்களும், 'ஹிட்' ஆகின.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - இது நம்ம ஆளுமறக்க முடியுமா? - இது நம்ம ஆளு மறக்க முடியுமா? - குரு சிஷ்யன் மறக்க முடியுமா? - குரு சிஷ்யன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
08 ஆக, 2020 - 16:25 Report Abuse
Mirthika Sathiamoorthi இந்த பிலஹரி ராகத்தை கேள்விப்படும் போதெல்லாம் இசைஞானி நினைவு எனக்கு வரும்..எல்லாம் இன்பமயம் எனும் படத்தில் "மாமா ஊடு மச்சு வூடு" எனும் குத்து பாடலை பிலஹரி ராகத்தில் அமைத்திருப்பார்..பிலஹரி ராகத்தை கர்நாடக சங்கீத இசைக்கருவி மட்டும் உபயோகித்த நிலையில் இதற்க்கு பம்பை பறை உறுமி என ஒதுக்கப்பட்ட சமூகத்தின் இசைக்கருவியை பயன்படுத்தியிருப்பார்..கதை படி பெரும் செல்வந்தன் மகன் சுமன் குப்பத்து பெண்ணை காதலித்து குப்பத்தில் திருமணம் நடக்கும் போது குப்பத்து ஜனங்களால் கொண்டாடப்படும்போது பாடும் பாட்டு.. இந்த சிச்சுவேஷனுக்கு உயரிய பிலஹரி ராகம் குத்துப்பாட்டாய் மாறியது உயரிய சமூகம் குப்பத்துக்கு வந்ததை சொல்லும் பாடல்.....கர்நாடக சங்கீதமே மிரண்ட ஒரு செயல்.. காரணம் பிலஹரி ராகத்தில் படுவது அவ்வளவு கடினம்..உன்னால் முடியும் தம்பியில் அந்த ராகத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.. அந்த ராகத்தை குத்து பாட்டில் புகுத்தி உயரிய சமூகம் மட்டும் ரசித்த ராகத்தை இசைபற்றிய மண்ணும் தெரியாத ஞான சூனியத்தையும் ஆட வைத்த அதிசியம் நிகழ்த்தியிருப்பார்.. ஒரு இசை புரட்சியே நடத்தியிருப்பர் ஞானி..சார்லி சப்ப்ளின் போன்றவர் இசைஞானி...சப்ப்ளின் படங்கள் ஒரே சாட்டில் ஒரே கேமரா கோணத்தில் காட்சிகள் இருக்கும்..இயக்குனராக விரும்பும் ஒவொருவனுக்கும் சப்ப்ளின் படம் ஒரு பாடம்..அதேசமயம் அவர்படங்களை திரை அறிவே இல்லாத குழந்தைகளும் ரசிக்கமுடியும்..அதுபோல ஞானி ..இவரின் இசையை கண்டு இசைக்கலைஞனும் பிரமிப்பான...பாமரனும் ஆட்டம்போடுவான்.. .ஹெட்ஸ் ஆப் இசைஞானி...உங்கள் இசையோடு பயணித்து உங்கள்காலத்தில் வாழ்வதை நான் பெருமையாக கருதுகிறேன்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in