Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா ? - அக்னி நட்சத்திரம்

05 ஆக, 2020 - 20:02 IST
எழுத்தின் அளவு:
Marakka-Mudiyuma---Agni-Natchathiram

படம் : அக்னி நட்சத்திரம்
வெளியான ஆண்டு : 1988
நடிகர்கள் : பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜனகராஜ்
இயக்கம் : மணிரத்தினம்
தயாரிப்பு : ஜி. வெங்கடேஸ்வரன்

மாபெரும் வெற்றி பெற்ற நாயகன் படத்திற்கு பின், பிரபு, கார்த்திக் என, இரட்டை குதிரைகளுடன், மணிரத்னம் களமிறங்கிய படம், அக்னி நட்சத்திரம். அரசு உயரதிகாரியான விஜயக்குமாருக்கு, இரு மனைவியர். அவர்களின் மகன்களான பிரபுவும், கார்த்திக்கும் எப்போதும் முட்டிக்கொள்வர். பிரபு, காவல் துறை அதிகாரி. கார்த்திக், வேலை தேடும் பட்டதாரி. இந்நிலையில், விஜயகுமாரை கொல்ல, அவரது எதிரிகள் முயற்சிக்கின்றனர். அதனால், எதிரும் புதிருமாக இருந்த பிரபுவும், கார்த்திக்கும் ஒன்றிணைந்து, எதிரியை பழி தீர்க்கின்றனர் என்பது தான், கதை.

வெகு சாதாரண, ஒரு வரிக் கதை. திடீர் திருப்பங்களும், ஆச்சரியங்களும் இல்லாத திரைக்கதை என்றாலும், இயக்கத்தில் வெற்றி பெற்றிருந்தார், மணிரத்னம். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அமைத்த காட்சிகளின் வடிவமைப்பும், இளையராஜா கொடுத்த ஆறு பாடல்களும் தான், படத்தின் மிக முக்கிய பலம்.

ஆனந்த் தியேட்டர் உரிமையாளர், ஜி.உமாபதி, இப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். ஒரெலி, ரெண்டெலி, மூணெலி, நாலெலி... அஞ்சலி என, அறிமுகமாகும், அமலாவும்; கவர்ச்சியுடன் வந்த நிரோஷாவும், ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டனர்.

வி.கே.ராமசாமி, ஜனகராஜ் கூட்டணி நகைச் சுவை பகுதியை குத்ததை எடுத்துக் கொண்டது. பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா என்ற, ஜனகராஜின் வசனம், வெகு பிரபலம்.

இளையராஜாவின் இசையில், நின்னுக்கோரி வர்ணம், ஒரு பூங்காவனம், ராஜா ராஜாதி, ரோஜாப்பூ ஆடி வந்தது, துாங்காத விழிகள், வா வா அன்பே... போன்ற பாடல்கள், பட்டையை கிளப்பின. அனைத்து பாடல்களையும், வாலி எழுதியிருந்தார்.

அக்னி நட்சத்திரம் தனித்தன்மை உடையது!

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வேலைக்காரன்மறக்க முடியுமா? - வேலைக்காரன் மறக்க முடியுமா? - இது நம்ம ஆளு மறக்க முடியுமா? - இது நம்ம ஆளு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

06 ஆக, 2020 - 23:41 Report Abuse
Karthikeyan Subramanian Karthikeyan Subramanian
Rate this:
g g -  ( Posted via: Dinamalar Android App )
06 ஆக, 2020 - 01:05 Report Abuse
g g manidhan padathai patri ezhudhumbothu, nayakan vasool il vetri peravillai endru sonneergal..indha article il naayakan maaberum vetri endru solreenga..information are conflicting....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in