பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
படம் : நாயகன்
வெளியான ஆண்டு : 1987
நடிகர்கள் : கமல், சரண்யா, ஜனகராஜ், டில்லி கணேஷ்
இயக்கம் : மணிரத்னம்
தயாரிப்பு : முக்தா பிலிம்ஸ்
தமிழ் திரையுலகில், 'கேங்ஸ்டர்' படங்களுக்கு முன்னோடி நம் நாயகன்! உலகின் சிறந்த படங்களில் ஒன்றாக, தமிழ் படம் ஒன்றுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்றால், அது நாயகன் படத்திற்கு தான். மும்பையில் வாழ்ந்த, தமிழரான, வரதராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி, இப்படம் உருவானது.
தொழிலாளர் சங்க தலைவரான, தன் தந்தையை, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற, போலீஸ் அதிகாரியை பலி வாங்கிவிட்டு, மும்பைக்கு தப்பி செல்கிறான், வேலு என்ற சிறுவன். மும்பை தாராவியில், அந்த சிறுவன் வளர்ந்து, பெரியவனாகி, தான் இருக்கும் பகுதியை ஆக்கிரமிக்க வருவோரை எதிர்க்கிறான். இதனால் அப்பகுதிக்கு, 'வேலு நாயக்கர்' என்ற, காட்பாதராக உருவாகுகிறார். கடத்தல் தொழிலும் ஈடுபடுவதால், எதிர்தரப்பு மற்றும் போலீசார், அவரின் உயிருக்கு குறி வைக்கின்றனர். கிளைமேக்ஸ் என்ன என்பது தான், கதைக்களம்.
படத்தில், கமல் என்ற நடிகர் தெரியாமல், வேலு நாயக்கர் என்ற கதாபாத்திரமே, ரசிகர்களுக்கு தெரியும். அந்த அளவிற்கு, கதாபாத்திரத்தோடு ஒன்றிணைந்திருந்தார் கமல்.
நடிகை சரண்யாவுக்கு, இது முதல் படம். 'நாளைக்கு கணக்கு பரீட்சை; சிக்கரமா விட்டுடுவீங்களா?' என, அவர் கேட்கும், ஒரு காட்சி போதும், நம் மனதிற்கு வலியை கொடுத்துவிடுவார்.
'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல, நீங்க நல்லவரா, கெட்டவரா...' போன்ற, சுருக்கமான, அதேநேரம் அடர்த்தியான வசனங்கள், ஒளிப்பதிவில் வித்தை, கதையோட்டத்தில் இருந்து இம்மியளவும் விலகாமை என, நாயகன், தமிழ் சினிமாவிற்கு கற்று கொடுத்த பாடங்கள் நிறைய!
வேலு நாயக்கராகவே வாழ்ந்த கமல், மும்பை தாராவியை, கண்முன் நிறுத்திய, தோட்டாதரணி, ஒளிப்பதிவில் பிரமாண்டம் காட்டிய, பி.சி.ஸ்ரீராம் ஆகிய மூவருக்கும், தேசிய விருது கிடைத்தது. இது, இளையராஜாவின், 400வது படம். பின்னணியில், முன்னணியில் இருப்பார்.
தமிழ் சினிமாவின், 'காட்பாதர்' அடையாளம், நாயகன்!